என்ன சொல்றீங்க...ஊம் சொல்றியா மாமா பாட்டுக்கு சமந்தா ஆட மாட்டாரா...கவலையில் ரசிகர்கள்
ஐதராபாத் : புஷ்பா 2 படத்தில் ஊம் சொல்றியா மாமா ஐட்டம் சாங்கிற்கு சமந்தா ஆட போவதில்லையாம். சமந்தாவிற்கு பதில் மற்றொரு நடிகையை தான் ஐட்டம் சாங்கிற்கு ஆட வைக்க போகிறார்களாம். இந்த தகவல் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீசான படம் புஷ்பா தி ரைஸ். செம்மர கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகி மிகப் பெரிய அளுவில் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தாலும், அவரை விட ஒரே ஒரு ஐயிட்டம் சாங்கிற்கு ஆடிய சமந்தா தான் செம பாப்புலர் ஆனார்.

ஐயிட்டம் சாங்கில் சமந்தா
சமந்தா ஆடிய ஊம் சொல்றியா மாமா பாடல் சில எதிர்ப்புக்களை சந்தித்தாலும், பிறகு செம வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த இந்த ஒரு பாடலுக்கு ஆட சமந்தா 5 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 படத்தின் ஷுட்டிங் தற்போது துவங்கி நடந்து வருகிறது.

புஷ்பா 2ல் சமந்தா ஆட மாட்டாரா
இந்த ஆண்டு மத்தியில் அல்லது இறுதியில் ரிலீசாகும் என கூறப்படும் புஷ்பா 2 படத்திலும் ஐயிட்டம் சாங்கிற்கு சமந்தா நடனமாட போவதாக முதலில் கூறப்பட்டது. இந்த படத்திலும் ஐயிட்டம் சாங் உண்டாம். ஆனால் இந்த பாடலில் சமந்தா ஆட போவதில்லையாம். அவருக்கு பதில் மற்றொரு பிரபல நடிகையை ஆட வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

சமந்தாவிற்கு பதில் இவரா
புஷ்பா 2 படத்தில் சமந்தாவிற்கு பதில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியை ஐயிட்டம் சாங்கிற்கு ஆட வைக்க போகிறார்களாம். புஷ்பா படத்திலேயே ஐயிட்டம் சாங் ஆடுவதற்கு முதலில் திஷா பதானியிடம் தான் கேட்கப்பட்டதாம். ஆனால் அவர் அதை மறுத்து விட்டதால் தான் சமந்தாவை ஆட வைத்தார்களாம். புஷ்பா படத்தில் மிஸ் ஆன வாய்ப்பை தற்போது புஷ்பா 2 படத்தில் பெற்றுள்ளார் திஷா பதானி.
Recommended Video

இது தான் விஷயமா
முதல் பாகத்தில் சமந்தா ஆடி ஐயிட்டம் சாங் பெரிய அளவில் ஹிட் ஆனதால், அந்த வாய்ப்பை மிஸ் செய்து விட்டோமே என வருத்தப்பட்ட திஷா பதானி, மீண்டும் அந்த வாய்ப்பை இழக்க கூடாது என்று புஷ்பா 2 படத்தின் ஐயிட்டம் சாங் ஆட ஓகே சொல்லி விட்டாராம். அதே சமயம், சமந்தாவிற்கு தொடர்ந்து ஐயிட்டம் சாங் ஆடும் வாய்ப்புக்கள் வந்து கொண்டிருக்கிறதாம். இதனால் தனது ஹீரோயின் இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் தான் புஷ்பா 2 படத்தில் ஆட நோ சொல்லி விட்டாராம் சமந்தா.


Click it and Unblock the Notifications











