என்னது எஸ்கே அந்த விஷயத்துல வீக்கா...இந்த நடிகை தான் உதவினாரா ?

சென்னை : சிவகார்த்திகேயனுக்கு வெளிநாட்டு நடிகை அந்த விஷயத்தை கற்றுக் கொடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அப்படி என்ன விஷயத்தை, எந்த நடிகை சிவகார்த்திகேயனுக்கு கற்றுக் கொடுத்தார் என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர்.

டாக்டர், அயலான் என அடுத்தடுத்த படங்களை முடித்த நடிகர் சிவகார்த்திகேயன் பல படங்களில் நடிக்க அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார். இதில் சிங்கப்பாதை போன்ற படங்கள் என்ன ஸ்டேடசில் உள்ளது என தெரியாத நிலையில், தற்போது எஸ்கே 20 படத்தின் ஷுட்டிங் ஆரம்பமாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை ஜதி ரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் இயக்கி வருகிறார்.

எஸ்கே.,யின் பைலிங்குவல் படம்

எஸ்கே.,யின் பைலிங்குவல் படம்

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் எஸ்கே 20 தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயனின் முதல் பைலிங்குவல் படமும் இது தான். இரண்டு வாரங்களுக்கு முன் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இந்த படத்தின் ஷுட்டிங் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து சென்னை, டில்லி, லண்டன் ஆகிய இடங்களிலும் இந்த ஷுட்டிங் நடக்கப்பட உள்ளது.

எஸ்கே.,க்கு இவர் தான் உதவினாரா

எஸ்கே.,க்கு இவர் தான் உதவினாரா

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரெபோஷப்கா நடிக்க போகிறாராம். லேட்டஸ்ட் தகவல்களின் படி, சிவகார்த்திகேயன் இந்த படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு டீச்சர் கேரக்டரில் நடிக்கிறாராம். அதே சமயம் மரியா இங்கிலீஷ் டீச்சராக நடிக்கிறாராம். காமெடி சம்பவங்கள் நிறைந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இந்திய மொழிகளை மரியாவுக்கு கற்றுக் கொடுக்கிறாராம். அதே சமயம் மரியா, சிவகார்த்திகேயனுக்கு இங்கிலீஷ் கற்றுக் கொடுக்கிறாராம்.

என்னது ரெண்டு ஜோடியா

என்னது ரெண்டு ஜோடியா

எஸ்கே 20 படத்தில் மரியா மட்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி இல்லையாம், மற்றொரு ஜோடியும் உள்ளதாம். அது யார் என்பதை படக்குழு பயங்கர சஸ்பென்சாக வைத்துள்ளதாம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடிக்கிறார்கள். தமான் இசையமைக்கிறார். இந்த படத்தை சுரேஷ் ப்ரொடக்ஷன்ஸ், நாராயணதாஸ் நராக், புஷ்கர் ராம் மோகன் ராயின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ், ஷாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா ஆகியோர் இணைந்து தயாராக்கிறார்கள்.

இதுவும் பண்றாரா எஸ்கே

இதுவும் பண்றாரா எஸ்கே

படங்களில் நடித்து வருவதுடன் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு பாட்டெழுதுவதிலும் வெற்றி கொடி நாட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்திற்காக சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக்குத்து மாஸ் ஹிட் அடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் தலைவர் 169 படத்திலும் சிவகார்த்திகேயன் மிக முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X