சந்திரமுகி 2 ஹீரோயின் இவரா... அப்போ வேற லெவலில் இருக்குமே

சென்னை : பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ், வடிவேலு நடிக்கும் சந்திரமுகி 2 படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டு, சில நாட்களே ஆன நிலையில் படத்தின் ஹீரோயின் யார் என்பது பற்றிய அப்டேட்டும் வெளியாகி உள்ளது. ஹுட்டிங்கையும் விரைவில் துவக்க உள்ளதாக கூறப்படுகிறது.

2005 ம் ஆண்டு டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வெளி வந்த படம் சந்திரமுகி. மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படமாக இந்த படம் அமைந்தது.

வசூலை வாரி குவித்ததுடன் அதிக நாட்கள் ஓடிய படமாகவும் சந்திரமுகி பார்க்கப்பட்டது. ரஜினியுடன் நயன்தாரா முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்த படம். ஹீரோயின் நயன்தாராவாக இருந்தாலும் முக்கிய ரோலில் நடித்த ஜோதிகா மொத்த பாராட்டையும் தட்டி சென்று விட்டார்.

சந்திரமுகி 2 அறிவிப்பு

சந்திரமுகி 2 அறிவிப்பு

சந்திமுகி படத்தின் வெற்றியை தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி 2 படத்தை பி.வாசு இயக்க போவதாகவும், இதிலும் ரஜினி நடிப்பாரா என பலசந்தேகங்கள், தகவல்கள் பரவின. இந்நிலையில் சமீபத்தில் சந்திரமுகி 2 படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது தான் சந்திரமுகி 2 டீம்

இது தான் சந்திரமுகி 2 டீம்

சந்திரமுகி 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதில் லாரன்ஸ் ஹீரோவாகவும், வடிவேலு முக்கிய ரோலிலும் நடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. பி.வாசு இயக்க உள்ள இந்த படத்திற்கு பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டனர்.

இவர் தான் ஹீரோயினா

இவர் தான் ஹீரோயினா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக சந்திரமுகி 2 படத்தின் ஹீரோயின் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. சந்திரமுகி 2 படத்தில் ஆண்டிரியா அல்லது ராஷி கண்ணா லீட் ரோலில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

இதெல்லாம் வேற நடந்திருக்கா

இதெல்லாம் வேற நடந்திருக்கா

ஜோதிகா, சிம்ரன், கியாரா அத்வானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் சந்திரமுகி 2 ஹீரோயின் பெயருக்கு அடிப்பட்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி அனுஷ்கா ஷெட்டியிடமும் பேசப்பட்டதாக தகவல் வெளியானதால், அனுஷ்காவின் ரசிகர்கள் அதை வைத்து சந்திரமுகி 2 போஸ்டரையே உருவாக்கி வெளியிட்டிருந்தனர்.

இவருக்கு தான் சான்ஸ்

இவருக்கு தான் சான்ஸ்

அரண்மனை படத்தின் இரண்டு பாகங்கள், தற்போது பிசாசு 2 ஆகிய படங்களில் பேய் ரோலில் நடித்துள்ளதால் ஆண்டிரியா தான் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பேய் ரோலில் மிரட்டுவதாக இருந்தாலும் சரி, கிளாமர் காட்டுவதாக இருந்தாலும் அவர் பின்னி எடுப்பார் என்பதால் அவரை தான் படக்குழு முடிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

கதை என்னவாக இருக்கும்

கதை என்னவாக இருக்கும்

ஏற்கனவே காஞ்சனா, முனி போன்ற படங்களின் பாகங்களில் பேய்க்கு பயந்தவராக, பிறகு பேய் பிடித்தவராக லாரன்ஸ் நடித்திருந்ததால் சந்திரமுகி 2 படமும் அதே போன்ற கதை கொண்டதாக தான் இருக்கும் என பலரும் கூறி வந்தனர். ரஜினி நடித்த ரோலில் லாரன்சா என பலரும் குழப்பமடைத்திருப்பதால் இந்த படத்தையும் செம ஹிட் ஆக்கும் பிளானில் இருக்கிறாராம் பி.வாசு.

சந்திரமுகி 2 கதை இதுதானா

சந்திரமுகி 2 கதை இதுதானா

சந்திரமுகி 2 படத்தின் கதை முழுக்க முழுக்க சந்திரமுகி மற்றும் வேட்டையன் ராஜா கேரக்டர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாம். வேட்டையன் ராஜா ரோலில் லாரன்ஸ் நடிக்க போகிறாராம். படம் முழுவதுமே வேட்டையன் ராஜா, சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தானாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X