தளபதி 66 இவர் நடிக்க வேண்டிய படமா...அப்புறம் ஏன் மாத்துனாங்க?

சென்னை : தளபதி 66 படம் பற்றிய, யாருக்கும் தெரியாத பல ஆச்சரியமான தகவல்களை வெளிப்படையாக பேட்டியில் பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு. இதனை கேட்டு விஜய் ரசிகர்கள் பலர் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தளபதி 66 படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் 6 ம் தேதி சென்னையில் சிறப்பு பூஜையுடன் துவங்கியது.

 ஹீரோயினை மாத்துங்க ப்ளீஸ்

ஹீரோயினை மாத்துங்க ப்ளீஸ்

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹீரோயின் ரோலில் இவர் தான் நடிக்க போகிறார் என பல நடிகைகளின் பெயர்கள் சொல்லப்பட்டு, கடைசியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதை உறுதி செய்துள்ளனர். அவர் பட பூஜையில் கலந்து கொண்டு க்யூட் செய்கைகளால் அனைவரையும் கவர்ந்தார். ஆனால் இவர் வேண்டாம். ஹீரோயினை மாற்றுங்கள் அல்லது படம் துவங்கிய 20 நிமிடங்களில் ஹீரோயினை படத்தில் சாகடித்து விடுங்கள் என ரசிகர்கள் பலர் கூறி வந்தனர்.

 ஃபர்ஸ்ட் சாய்ஸ் இவர் தான்

ஃபர்ஸ்ட் சாய்ஸ் இவர் தான்

ஆனால் தளபதி 66 படத்திற்கு ஹீரோயினாக நடிக்க டைரக்டர் வம்சியும், தயாரிப்பாளர் தில் ராஜுவும் முதலில் முடிவு செய்து வைத்திருந்தது ராஷ்மிகாவை இல்லையாம். பூஜா ஹெக்டே தான் அவர்களின் ஃபர்ஸ்ட் சாய்சாக இருந்துள்ளது. ஏற்கனவே பீஸ்ட் படத்தில் நடித்திருப்பதால் அவர் சரியான தேர்வு என விஜய்யும் பாராட்டி உள்ளார். ஆனால் தளபதி 66 படத்திற்கு கால்ஷீட் ஒத்து வராததால் தான் வேறு வழியில்லாமல் பூஜாவை மாற்றி விட்டு, ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்தார்களாம்.

 இதனால தான மாத்தினோம்

இதனால தான மாத்தினோம்

இது பற்றி பேட்டி ஒன்றில் தில் ராஜு கூறுகையில், அவர் எவ்வளவு நல்ல நடிகை என எனக்கு நன்றாக தெரியும். அவரது முந்தைய இரண்டு படங்களை நான் தயாரித்துள்ளேன். ஆனால் விஜய் சார் போன்ற பெரிய ஸ்டாரே அவரை பாராட்டி சொல்வது பெரிய விஷயம். டைரக்டர், ஷாட் ரெடி என்றதுமே அடுத்த நிமிடம் கேமிரா முன் நின்று ஃபுல் எனர்ஜியுடன் நடிக்க துவங்கி விடுவார். இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என பூஜா கூறியதாலேயே தான் ராஷ்மிகாவை தேர்வு செய்தோம் என்றார்.

எல்லாமே பெரிய படங்கள்

எல்லாமே பெரிய படங்கள்

பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஆச்சார்யா படம் ஏப்ரல் 29 ம் தேதி ரிலீசாக உள்ளது. இவை இரண்டு படங்களுமே மிகப் பெரிய படங்கள். தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வருவதால் தான் அவரால் கால்ஷீட்டில் அட்ஜஸ்மென்ட் செய்ய முடியவில்லை என தில் ராஜு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X