»   »  எல்லாம் அனுஷ்கா மயம்... இஞ்சி இடுப்பழகி ரசிகர்கள் கருத்து!

எல்லாம் அனுஷ்கா மயம்... இஞ்சி இடுப்பழகி ரசிகர்கள் கருத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொண்ணு குண்டா இருந்தா கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களா? கல்யாணத்துக்கு அப்புறம் குண்டானா டைவர்ஸ் பண்ணிடுவீங்களா? என்று கேட்கும் அனுஷ்காவிற்காகவே குண்டு பெண்கள் பலரும் இந்த படத்தைப் பார்க்கலாம்.

ஆர்யா அனுஷ்கா ஜோடி என்று ஒருவித எதிர்பார்ப்புக்களுடனேயே தியேட்டருக்குப் போகும் ரசிகர்களுக்கு எல்லாம் நானே என்று எதார்த்தமாக புரிய வைக்கிறார் அனுஷ்கா. படம் முழுக்க அனுஷ்கா அனுஷ்காதான் அதனால்தான் ஆர்யா நிறையவே அடக்கி வாசித்திருக்கிறார்.


முன்பெல்லாம் ஹீரோவோ, வில்லனோ சினிமாவில் மொட்டை போட்டு நடிப்பது பரபரப்பான செய்தியாக நாளிதழ்களில் வெளியாகும். அந்த டிரெண்டை மாற்றியவர் கமல்ஹாசன். பலவித கெட் அப்களை போட்டு மிரட்டியவர் விக்ரம். நடிகர்கள் மட்டும்தானா நாங்களும் கெட் அப் மாற்றுவோம் என்று மெனக்கெட்டுள்ளார் அனுஷ்கா. இந்த மெனக்கெடலுக்கு அவருக்கு வெற்றி கிடைத்தா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.


விமர்சனங்கள் எப்படி?

விஜய், அஜீத் படம் வெளியாகும் போது டுவிட்டரில் நடக்கும் விமர்சனப் போர்கள் நடக்கவில்லை என்றாலும் ஆஹா ஓகோ என்று யாரும் டுவிட்டரில் பாராட்டவில்லை. ஆர்யாவிற்கு இந்த படம் தோல்விதான் என்கின்றனர் சிலர்.


அனுஷ்கா மயம்

என்னதான் விமர்சனம் சொன்னாலும் அனுஷ்காவிற்காக இந்த படத்தைப் பார்ப்போம் என்கின்றனர் சிலர்.


ஆர்யா ரொம்ப வேஸ்ட்பா

அனுஷ்கா நடிப்பு சூப்பர் என்று கூறும் ரசிகர்கள் படத்தில் ஆர்யா வேஸ்ட் என்றே கூறி பதிவிட்டுள்ளனர். படம் போர் அடிப்பதாகவும் பதிவிட்டுள்ளனர்.


பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக்

பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக்

படத்தின் கதை அருமையாக இருக்கிறது. ஆரோக்கியமான கதைக்கு வலுவான திரைக்கதை இல்லையே என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கிறது.


அனுஷ்காவிற்காக பார்க்கலாம்பா

அனுஷ்காவிற்காக பார்க்கலாம்பா

என்னதான் சொல்லுங்க... பாகுபலி தேவசேனாவாகவும், ருத்ரம்மா தேவியாகவும் வாளேந்திய அனுஷ்கா, குண்டு பெண்மணிகளின் மனதில் பால்வார்க்கும் வகையில் பேசும் வசனங்களுக்காகவும், அவரது மெனக்கெடலுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
English summary
Inji Iduppazhagi, starring Anushka and Arya in the lead, had created decent buzz prior to its release, thanks to Anushka's awesome dedication.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil