பாப்புலர் ஆன வருண்–அக்ஷரா... நேரில் வாழ்த்திய பிக்பாஸ் பிரபலங்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. மொத்தம் 106 நாட்களைக் கொண்ட இந்த போட்டியில் 50 நாட்கள் கடந்த நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக சஞ்சீவ் மற்றும் அமீர் வந்தனர்.
இவர்களில் இதுவரை 12 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் மூன்று வாரங்களே உள்ளதால் முதல் முறையாக டபுள் எவிக்ஷன் நடத்தப்பட்டது. இதில் வருண் மற்றும் அக்ஷரா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஸ்பெஷலான அக்ஷரா
ஆரம்பம் முதலே அழகான நட்பை வருணும், அக்ஷராவும் தொடர்ந்து வந்தனர். அந்த நட்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் அக்ஷரா ஸ்பெஷல் போட்டியாளராக பார்க்கப்படுகிறார். இதற்கு காரணம் பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை ஜோடியாக வந்து, ஜோடியாக வெளியேறியவர் அக்ஷரா மட்டுமே.

ஜோடியாக வந்து, போனவர்
வீட்டிற்குள் வரும் போது சுருதியுடன் இணைந்து வந்தார். வெளியேறும் போதும் தனது நண்பர் வருணுடன் வெளியேறி உள்ளார். பல வாரங்கள் வெளியில் தெரியாமல் இருந்த வருண், கடைசி சில வாரங்கள் டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட துவங்கினார். இந்நிலையில் வெளியேறிய அன்று வருண் நடித்த ஜோஸ்வா படத்தின் டிரைலர் பிக்பாஸ் மேடையிலேயே கமலால் வெளியிடப்பட்டது.

வருண் குடும்ப ஃபோட்டோ
இதைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் தனது குடும்ப ஃபோட்டோவை வெளியிட்டார் வருண். பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வருணுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை வெளியிட்டு வருகிறார் அக்ஷரா. இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் 82 நாட்கள் இருந்து விட்டு வீட்டிற்கு வந்த வருணை அவரது குடும்பத்தினர் வரவேற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

வருணுக்கு அன்பான வரவேற்பு
வருணின் குடும்ப உறுப்பினர்கள் அவரை கட்டிப்பிடித்து கண்ணீருடன் வரவேற்றனர். ஆரத்தி எடுத்து வரவேற்று, பின் கேக் வெட்டி பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வருண் கொண்டாடினார். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன் வருண், கமலிடம் சொன்ன, ஒரு பாதியை தான் காட்டி உள்ளேன். மற்றொரு பாதியை இனிமேல் காட்டுவேன் என்ற டயலாக்கை வைத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்ததையும், ஜோஸ்வா படத்தின் டிரைலரையும் இணைத்து அசத்தல் கிளிப்பிங்களை வெளியிட்டுள்ளனர்.

வருணுடன் பிக்பாஸ் பிரபலங்கள்
இந்நிலையில் பிக்பாஸில் பங்கேற்ற போட்டியாளர்களான இமான் அண்ணாச்சி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகியோர் வருண் மற்றும் அக்ஷராவை சந்தித்துள்ளனர். ஐக்கி பெர்ரி, தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு மற்ற போட்டியாளர்களை நேரில் சென்று சந்தித்து வருகிறார். இசைவாணி, நமீதா மாரிமுத்து, அபிஷேக்ராஜா, இமான் அண்ணாச்சி, சுருதி, மதுமிதா ஆகியோரை தொடர்ந்து தற்போது வருண் மற்றும் அக்ஷராவை சந்தித்துள்ளார்.

இது இனிய நாள்
இந்த ஃபோட்டோக்களை இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, அக்ஷரா ஆகியோர் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இமான் அண்ணாச்சி இந்த ஃபோட்டோவுடன், இது இனிய நாள் என கேப்ஷன் பதிவிட்டிருந்தார். இதனை ரசிகர்கள் வரவேற்பு லைக்குகளை நிரப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











