தளபதி 67 டீம் ரெடி...வேலைகளை துவக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் டைரக்டர்...மாஸா இருக்க போகுதாமே
சென்னை : விஜய்யின் தளபதி 67 பட டைரக்டர் யார் என்பது பற்றி பல தகவல்கள் பரவி வந்த நிலையில், டைரக்டர் மட்டுமல்ல இசையமைப்பாளர், ஷுட்டிங் எப்போது துவங்க போகிறது என்ற தகவல் வரை வெளியாகி விட்டது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தின் வேலைகளை துவக்கி விட்டார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கிறார்.

தளபதி 66 ஷுட்டிங்
தளபதி 66 படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் சென்னையில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷுட்டிங் அடுத்த மாதம் ஐதராபாத்தில் துவங்கப்பட உள்ளது. இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். விஜய்க்கு அண்ணனாக நடிக்க இரண்டு பிரபல நடிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கான இசையை தமன் இரவு பகலாக தயார் செய்து வருகிறார்.

தளபதி 67 டைரக்டர் இவர் தான்
தளபதி 66 பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க போவதாக கூறப்பட்டது. பிறகு அட்லி இயக்குகிறார் என்றார்கள். இல்லை பீஸ்ட் படம் பெற்ற நெகடிவ் விமர்சனங்களை சரி செய்ய தளபதி 67 படத்தையும் நெல்சன் திலீப்குமார் இயக்க விஜய் வாய்ப்பு கொடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க போவதாக முடிவாகி விட்டது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

செம அப்டேட்டா இருக்கே
மாஸ்டர் பட கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தில் இணைய போகிறதாம். இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்குமாம். இந்த படத்திற்கு விக்ரம் வேதா, கைதி படங்களுக்கு இசையமைத்த சாம் சிஎஸ் தான் தளபதி 67 படத்திற்கும் இசையமைக்க போகிறாராம். மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தான் தளபதி 67 படத்தை துவக்க போகிறதாம்.

மாஸா இருக்கும் போலவே
தளபதி 67 படத்தின் ஷுட்டிங் வரும் அக்டோபர் மாதம் முதல் துவங்கப்பட உள்ளதாம். இதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே துவக்கி விட்டாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம். தளபதி 67 படத்தில் ஹீரோயின், பாட்டு என எதுவும் இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்-நடிகைகள் பற்றிய தேர்வு நடந்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











