என்னது...பிக்பாஸ் அல்டிமேட்டில் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரி இவரா?... குஷியான ரசிகர்கள்

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட்டில் ஏற்கனவே சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சதீஷ் வைல்ட் கார்டு என்ட்ரியாக கடந்த வாரம் வந்துள்ள நிலையில் மற்றொரு வைல்ட் கார்டு என்ட்ரியாக யார் வர போகிறார்கள் என்ற சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி 30 ம் தேதி 14 போட்டியாளர்களுடன் 24 மணி நேர நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஷுட்டிங் காரணமாக கமல் விலகியதால், கடந்த வாரம் முதல் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, வனிதா விஜயக்குமார், ஷாரிக், அபினய் வெளியேறி உள்ள நிலையில், வைல் கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் கலக்க போவது யாரு சதீஷ் ஆகியோர் கடந்த வாரம் உள்ளே வந்தனர்.

நாமினேஷனில் 7 பேர்

நாமினேஷனில் 7 பேர்

பிக்பாஸ் அல்டிமேட்டில் புதிய ஹோஸ்டாக சிம்பு அறிமுகமாகும் நாள் என்பதால் கடந்த வாரம் நோ எவிக்ஷன் என அறிவித்தார் சிம்பு. அதே சமயம் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் உண்டு என்பதை அவர் கடந்த வாரமே சொல்லி விட்டார். இதற்கிடையில் இந்த வாரம் நடந்த நாமினேஷனில் அபிராமி, அனிதா, தாடி பாலாஜி, ஜுலி, சினேகன், சுருதி மற்றும் தாமரை ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

வெளியே போவது யார்

வெளியே போவது யார்

இதுவரை வெளியான தகவலின் படி இந்த வாரம் தாடி பாலாஜி தான் வெளியேற போகிறாராம். அதோடு இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என சிம்பு கடந்த வாரமே கூறியதால், வெளியேற போகிற மற்றொருவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதவரை பதிவான ஓட்டு சதவீத அடிப்படையில் தாடி பாலாஜி, சினேகன், சுருதி ஆகியோர் தான் கடைசி மூன்று இடங்களில் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.

 அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரி

அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரி

ஏற்கனவே கடந்த வாரம் சிம்பு வந்ததன் ஸ்பெஷலாக இரண்டு வைல்ட் கார்டு என்ட்ரிகள் ஒரே நாளில் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலின் படி இந்த வார இறுதியில் மற்றொரு வைல்ட் கார்டு என்ட்ரியாக மற்றொரு பாப்புலர் போட்டியாளர் வீட்டிற்குள் அனுப்பப்பட உள்ளாராம். கடந்த வாரம் இரண்டு ஆண் போட்டியாளர்கள் அனுப்பப்பட்டு விட்டதால் இந்த வாரம் பெண் போட்டியாளர் ஒருவர் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட உள்ளாராம்.

என்னது இவர் வர போகிறாரா

என்னது இவர் வர போகிறாரா

வைல்ட் கார்டு என்ட்ரியாக ஓவியா, ஷெரின், சாக்ஷி அகர்வால் யாராவது உள்ளே போவார்கள் என சொல்லப்பட்டு வந்தது. வனிதா விஜயக்குமார் மீண்டும் வர உள்ளதாக கூட பேச்சு அடிப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நடிகை லாஸ்லியா வைல்ட் கார்டு என்ட்ரியாக இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் போக போகிறாராம். பிக்பாஸ் சீசன் 3 ல் போடட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியா, ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயின் ஆகி விட்டார். படங்களில் பிஸியாக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கேட்டதும் ஓகே சொல்லி விட்டாராம்.

இனி வீடு கலகலக்க போகுதா

இனி வீடு கலகலக்க போகுதா

ஏற்கனவே எக்ஸ் லவ்வர்சான நிரூப்-அபிராமி வீட்டிற்குள் உள்ளனர். இதற்கிடையில் நிரூப் எதிரிலேயே அபிராமியின் இடுப்பை பாலா டச் பண்ணியதாக கூறப்படுவது என பல பஞ்சாயத்துக்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே லாஸ்லியா, கவின் காதல் விவகாரம் அவர்கள் கலந்து கொண்ட சீசனில் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் லாஸ்லியாவின் என்ட்ரியால் புதிய காதல் காட்சிகள் ஏதாவது அரங்கேறுமா என ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X