Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரணகளமான பிக்பாஸ் வீடு... இந்த வாரம் வெளியேற போவது இவர் தானா ?
சென்னை : அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, 58 நாட்களை கடந்து விட்டது. 18 போட்டியாளர்களில் 7 பெண் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 2 பேர் புதிய வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்துள்ளனர்.
நாட்கள் செல்ல செல்ல போட்டியாளர்களிடம் மோதலும், போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியும் அதிகரித்து வருகிறது. அதே சமயம் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற போவது யார், இறுதிப் போட்டி வரை செல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

ஒருவர் பாக்கியில்லை
தற்போது வீட்டிற்குள்ள உள்ள 13 போட்டியாளர்களில் இந்த வாரம் அதிக பட்சமாக 10 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதாவது கேப்டன் நிரூப், புதிதாக வந்த அமீர் மற்றும் சஞ்சீவ் மட்டுமே நாமினேஷனில் இருந்து தப்பி உள்ளனர். இவர்களை தவிர வீட்டில் உள்ள அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெளியேற போவது இவரா
இந்த வாரம் சிபி, வருண், அபிஷேக், பிரியங்கா, அபினய், பாவ்னி, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, தாமரை, ராஜு ஆகியோர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அபிஷேக் தான் இந்த வாரம் குறைந்த ஓட்டுக்களை பெற்றுள்ளாராம். அதனால் அபிஷேக் தான் இந்த வாரம் வெளியேற போகிறாராம்.

ஓட்டுக்கள் என்னாச்சு
இவர்களில் அபிஷேக் ராஜா, மக்களின் குறைவான ஒட்டுக்களையும், அதிகமான விமர்சனங்களையும் பெற்று நிகழ்ச்சியின் 21 வது நாளில் வெளியேற்றப்பட்டார். 47 வது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார். மீண்டும் வீட்டிற்குள் வந்தாலும் இவரை ரசிகர்கள் ஏற்காமல், எதற்காக இவரை மீண்டும் அழைத்து வந்தீர்கள். அப்படியானால் ரசிகர்கள் அளித்த ஓட்டுக்கு என்ன மதிப்பு என கேட்டு வந்தனர்.

டேஞ்சர் ஜோனில் இருப்பவர்கள்
இந்த வாரத்தின் துவக்கத்தில் பதிவான ஓட்டுக்களின் அடிப்படையில் பார்த்தால் அபிஷேக்கிற்கு வெறும் 3 சதவீதம் ஓட்டுக்கள் தான் கிடைத்துள்ளதாம். கடந்த வாரமே வெளியேற்றப்படுவோரில் எதிர்பார்க்கப்பட்ட தாமரை, அபினய் ஆகியோர் அபிஷேக்கை விட கூடுதல் ஓட்டுக்கள் பெற்றுள்ளனராம். அதனால் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருப்பது அபிஷேக் தானாம்.

முதலிடம் இவருக்கு தானா
இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக 20 சதவீதம் ஓட்டுக்களை பெற்று முதலிடத்தில் இருப்பது ராஜு தானாம். இவரைத் தொடர்ந்து பிரியங்கா, சிபி, இமான் அண்ணாச்சி, பாவ்னி, அக்ஷரா ஆகியோர் இருக்கிறார்களாம். குறைவான ஓட்டுக்கள் பெற்றவர்கள் பட்டியலில் அபிஷேக் முதலிடத்திலும் அவரைத் தொடர்ந்து அபினய், வருண், தாமரை ஆகியோர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video

பொருத்திருந்து பார்க்கலாம்
இது வாரத்தின் துவக்கத்தில் பதிவான ஓட்டுக்களின் அடிப்படையில் கூறப்பட்டதாக இருந்தாலும் அதற்கு பிறகு மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த வாரம் வெளியேற போகிறவர் அபிஷேக்கா அல்லது வேறு யாருமா என்பது நாளை அல்லது நாளை மறுநாளே தெரிய வரும்.