பிக்பாஸ் சீசன் 5... ஏழாவது வாரத்தில் வெளியேறியவர் இவர் தான்

சென்னை : விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் வெளியேறி உள்ளனர். தற்போது 12 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வருகின்றனர்.

முதல் வார இறுதியில் தவிர்க்க முடியாத காரணங்களால் நமிதா மாரிமுத்து தானாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நாடியா சாங், சின்னபொண்ணு, அபிஷேக் ராஜா, சுருதி, மதுமிதா ஆகியோர் எவிக்ஷன் மூலம் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டனர்.

வெளியேற போவது யார்

வெளியேற போவது யார்

மிகவும் விறுவிறுப்பாக சென்டிமென்ட், சண்டை, சமாதானம், காரசார விவாதங்கள், மோதல்கள் என சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 48 வது நாளை எட்டி உள்ளது. ஏழாவது வார இறுதி எபிசோட்களான இன்றும் நாளையும் கமல் வந்து, யாரெல்லாம் காப்பாற்றப்பட போகிறார்கள். யார் வெளியேற போகிறார் என்பதை அறிவிக்க உள்ளார்.

அபிஷேக் வைல்கார்டு என்ட்ரி

அபிஷேக் வைல்கார்டு என்ட்ரி

இந்நிலையில் வைல்கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல போகிறவர் என நமிதா மாரிமுத்து, ஷாலு ஷம்மு, மிலா, சஞ்சீவ் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் கூறப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, நிகழ்ச்சியின் 21 வது நாளிலில் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா, 47 வது நாளில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளார். நேற்றைய வெள்ளிக்கிழமை எபிசோடில் அபிஷேக் வீட்டிற்குள் செல்வதாக ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

நாமினேட் ஆன 9 பேர்

நாமினேட் ஆன 9 பேர்

இதனையடுத்து இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரிடமும் அதிகரித்துள்ளது. ஏழாவது வாரத்தில் மொத்தம் 9 நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அபினய், இமான் அண்ணாச்சி, பாவ்னி, தாமரை, இசைவாணி, சிபி, அக்ஷரா, ஐக்கி பெர்ரி, நிரூப் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அபினய் தொடர்ந்து ஏழாவது வாரமாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

வெளியேற போகிறவர் இவரா

வெளியேற போகிறவர் இவரா

இந்த 9 பேரில் இருந்து இசைவாணி தான் இந்த வாரம் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தாமரையுடன் இந்த வாரம் ஏற்பட்ட மோதல், வீட்டிற்குள் பலரின் வெறுப்பை சம்பாதித்தது போன்ற காரணங்களால் மக்களிடம் அவருக்கு தான் குறைவான ஓட்டுக்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் முடிவாகவில்லையா

இன்னும் முடிவாகவில்லையா

இருந்தாலும் இசைவாணி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவில்லை. இந்த வாரம் இசைவாணி வெளியேறியது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்த வார எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்படும் எபிசோட்டிற்கான ஷுட்டிங் இதுவரை முடியவில்லை. அதனால் கடைசி நிமிடத்தில் வெளியேற்றப்படுவர் மாற்றப்பட கூட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

கமல் வேறு இன்றைய ப்ரோமோவில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பிக்பாஸ் டயலாக்கை மீண்டும் கூறி உள்ளதால் ட்விஸ்ட் ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இதனால் இந்த வாரம் வெளியேற போகிறவர் இசைவாணி இல்லாமல் வேறு ஒருவராக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X