பிக்பாஸ் சீசன் 5...இந்த வாரம் வெளியேற போவது இவர் தான்

சென்னை : கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்டது. தற்போது இந்த நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து, கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

முதல் வாரத்திலேயே நமிதா மாரிமுத்து தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களால் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் நாடியா சாங், சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வைல்ட்கார்டு என்ட்ரி

வைல்ட்கார்டு என்ட்ரி

நிகழ்ச்சியின் 21 வது நாளில் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா, 47 வது நாளில் முதல் வைல்ட்கார்டு என்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் அடுத்தடுத்த வைல்ட்கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக வந்துள்ளனர்.

குறைந்த ஓட்டை பெற்றவர்கள்

குறைந்த ஓட்டை பெற்றவர்கள்

சண்டை, மோதல், காரசார வாக்குவாதங்கள் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் படி அபிஷேக் ராஜா மற்றும் அபினய் ஆகிய இருவர் தான் மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாரம் வெளியேற போகிறவர்

இந்த வாரம் வெளியேற போகிறவர்

விஜய் டிவிக்கு நெருக்கமான தகவல்கள் கூறுகையில், இந்த வாரம் அபிஷேக்ராஜா தான் எவிக்ஷன் மூலம் வெளியேற போகிறாராம். இரண்டாவது முறையாக பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இருந்து அபிஷேக் வெளியேற்றப்பட போகிறாராம். குறைந்து ஓட்டுக்களுடன், இவர் தான் டேஞ்சர் ஜோனில் இருக்கிறாராம்.

காயினை பயன்படுத்த முடியாது

காயினை பயன்படுத்த முடியாது

இந்த வாரம் எவிக்ஷனின் போது காயினை பயன்படுத்த முடியாது என பிக்பாஸ், வார துவக்கத்திலேயே சொல்லி விட்டதால் அபிஷேக் கடைசி நிமிடத்தில் காப்பாற்றப்பட வாய்ப்பிருக்காது என கூறப்படுகிறது. ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளை சந்தித்து, ஹவுஸ்மேட்களை இன்ஃபுலியன்ஸ் செய்கிறார் என குற்றம்சாட்டப்பட்டார். மீண்டும் வீட்டிற்குள் வந்த போது தான் இன்ஃபுலியன்ஸ் செய்வதை சரி என வீட்டில் உள்ளவர்களிடம் விளக்கம் அளித்தார்.

அபிஷேக்கை விரும்பாத நெட்டிசன்கள்

அபிஷேக்கை விரும்பாத நெட்டிசன்கள்

மீண்டும் அபிஷேக் வீட்டிற்குள் வந்ததை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் விரும்பவில்லை. மக்கள் அளித்த ஓட்டு என்ன ஆனது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இரண்டாவது முறை வீட்டிற்குள் வந்தும் மற்றவர்களை இன்ஃபுலியன்ஸ் செய்ததுடன், அதை ஓப்பனாகவும் மற்றவர்களிடம் கூறினார். இது ரசிகர்கள் மனதில் பெரிய அளவில் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X