பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறிய அடுத்த "S" போட்டியாளர்
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட்டில் வீட்டில் இருந்து ஏற்கனவே பல எஸ் பெயர் கொண்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் மற்றொரு எஸ் போட்டியாளரும் இந்த வாரம் வெளியேறி உள்ளார். இதனால் என்னடா எஸ்.,க்கு வந்த சோதனை என ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி 31 ம் தேதி துவங்கி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கமல் தொகுத்து வழங்கி வந்தார். கமல் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதை அடுத்து கடந்த 2 வாரங்களாக சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மற்ற நாட்களில் 24 மணி நேர நேரடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட், ஞாயிற்றுக்கிழமை மட்டும் பகலில் லைவ் நிறுத்தப்பட்டு, மாலை 6.30 மணிக்கு ஹோஸ்ட் வந்து எலிமினேஷன் நடைபெறுவது மட்டும் லைவாக காட்டப்படும். தினசரி நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

வெளியேற்றப்பட்ட S போட்டியாளர்கள்
இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபினய், வனிதா விஜயக்குமார், தாடி பாலாஜி, ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். இவர்களில் வனிதாவை தவிர மற்றவர்கள் எலிமினேஷனில் மூலம் வெளியேற்றப்பட்டனர். வைல்டு கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி, கலக்க போவது யாரு சதீஷ், ரம்யா பாண்டியன் ஆகியோர் வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஆரம்பத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி என வரிசையாக எஸ் என்ற எழுத்து பெயர் கொண்ட போட்டியாளர்களாக வெளியேற்றப்பட்டு வந்தது பரபரப்பை கிளப்பியது.

நாமினேட் ஆன 4 பேர்
பிறகு மற்றவர்களும் வெளியேற்றப்பட்டதால் இந்த பிரச்சனை ஓய்ந்தது. இந்நிலையில் இந்த வாரம் மொத்தம் 4 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. சுருதி, சினேகன், ஜுலி, பாலாஜி முருகதாஸ் ஆகிய நான்கு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் வெளியேற போகிறார் என்பதை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். நாளை சிம்பு வரும் வார இறுதி நாளில் இது அறிவிக்கப்படும்.

சதீசை காப்பாற்றிய போட்டியாளர்கள்
இந்த வாரம் வழக்கத்தை விட வித்தியாசமான முறையில் நாமினேஷன் நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு பேரை காப்பாற்ற வேண்டும் என சொல்லப்பட்டது. பெரும்பாலானவர்கள் சதீஷ் பெயரை சொல்லி அவரை காப்பாற்றினார்கள். நிரூப் இந்த வார கேப்டன் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது. கேரக்டர் அடிப்படையில் கேட்ட போது காணாமல் போனவராக இருப்பவர், போரான போட்டியாளர் என்றும் சினேகனின் பெயரையே தேர்வு செய்தனர்.

இந்த வாரம் வெளியேறிய இவர் தானா
இந்த சமயத்தில் நாளை சிம்பு வரும் எபிசோடிற்கான ஷுட்டிங் இன்று பிற்பகல் துவங்கி நடைபெற்றது. இதில் இந்த வாரம் கவிஞர் சினேகன் வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த 2 வாரங்களாக இடைவெளி விட்ட நிலையில் மீண்டும் மற்றொரு எஸ் எழுத்து போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார். இதை கவனித்த நெட்டிசன்கள் அடுத்த எஸ் யாரு என கேட்க, அதை அவர்களில் சிலரே, வேறு யாரு சுருதி தான் என பதிலும் சொல்லி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











