»   »  பாகுபலி 2 ஒரு சாதனையும் புரியவில்லை: புள்ளி விபரம் சொல்லும் பிரபல இயக்குனர்

பாகுபலி 2 ஒரு சாதனையும் புரியவில்லை: புள்ளி விபரம் சொல்லும் பிரபல இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகுபலி 2 படம் எந்த சாதனையும் படைக்கவில்லை என்று பாலிவுட் இயக்குனர் அனில் சர்மா தெரிவித்துள்ளார்.

பாகுபலி 2 படம் உலக அளலில் ரூ. 1, 500 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் கதார்: ஏக் பிரேம் கதா வெற்றிப் படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குனர் அனில் சர்மாவிடம் பாகுபலி சாதனை பற்றி கேட்கப்பட்டது.


அதற்கு அவர் கூறியதாவது,


 பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி 2 படம் இதுவரை எந்த ஒரு சாதனையும் செய்யவில்லை. என் படமான கதார்: ஏக் பிரேம் கதா 2001ம் ஆண்டு ரிலீஸாகி ரூ.265 கோடி வசூலித்தது. அதன் தற்போதைய மதிப்பு ரூ. 5,000 கோடி.


 சாதனை

சாதனை

மீண்டும் மீண்டும் பாகுபலி 2 பற்றி கேட்காதீர்கள். நல்ல படங்கள் வந்தால் சாதனைகளை முறியடிக்கத் தான் செய்யும். ஆனால் பாகுபலி 2 ஒரு சாதனையும் படைக்கவில்லை.


 கதார்

கதார்

டிக்கெட் விலை வெறும் 25 ரூபாயாக இருந்தபோது கதார் படம் ரூ. 265 கோடி வசூல் செய்தது. ஆனால் பாகுபலி 2 படமோ தற்போது தான் ரூ. 1,500 கோடி வசூலித்துள்ளது. அதனால் எந்த சாதனையையும் அது முறியடிக்கவில்லை என்றார் அனில் சர்மா.


ஜீனியஸ்

ஜீனியஸ்

அனில் சர்மாவின் மகன் உத்கர்ஷ் ஹீரோவாக நடிக்கும் ஜீனியஸ் படத்துவக்க விழா நேற்று மும்பையில் நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் தர்மேந்திரா தனது மனைவி ஹேமமாலினியுடன் கலந்து கொண்டு உத்கர்ஷை ஆசிர்வதித்தார்.


English summary
While, on one side, the entire nation is going crazy over Baahubali 2's grand success, director Anil Sharma who has given a few hit films including Gadar: Ek Prem Katha and Apne, rather gave a shocking statement to the media!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil