Don't Miss!
- Finance
ரூ.10000000000000 இழப்பு.. வெறும் 7நாளில் அதானி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி.. சந்தை மதிப்பு 51% சரிவு..!
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- News
திமுகவை வீழ்த்த.. அதிமுக ஒன்று சேர்ந்தேயாகனும்.. அண்ணாமலையுடன் சேர்ந்து சிடி ரவி அளித்த கறார் பேட்டி
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கேஜிஎஃப்.,கே டஃப் கொடுக்க போறாங்களாமே...கோலிவுட்டின் பிரசாந்த் நீல் இவரா? அப்போ யாஷ் யாரு?
சென்னை : கேஜிஎஃப் படத்திற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு தமிழில் ஒரு படத்தை இயக்க ஏற்பாடு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலே மாசா இருக்கே என ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.
உலக அளவில் வசூலை வாரி குவித்து, அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது கேஜிஎஃப் 2. உலகம் முழுவதும் இதுவரை 1200 கோடிகளை தாண்டி வசூல் செய்துள்ளது. கேஜிஎஃப் 2 ஐ ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள் கேஜிஎஃப் 3 படம் பற்றிய தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் கேஜிஎஃப் படத்திற்கே டஃப் கொடுக்கும் வகையில் தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க போகிறார்களாம்.
நடிகர் சூர்யா தற்போது டைரக்டர் பாலா இயக்கும் சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல், ஜெய்பீம் பட டைரக்டருடன் ஒரு படம், அயலான் பட டைரக்டர் இயக்கும் ஒரு படம், சிறுத்தை சிவா இயக்கும் படம், சுதா கொங்கரா உடன் மற்றொரு படம் என வரிசையாக கமிட்டாகி வருகிறார்கள்.
விஜய்யின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… அட சூப்பரான அப்டேட்டா இருக்கே !

தள்ளி போகும் வாடிவாசல்
வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வரும் விடுதலை படத்தின் வேலைகள் முடிய சிறிது காலம் ஆகும் என்பதால், விடுதலை படத்தை முடித்த பிறகே வாடிவாசல் படத்தின் வேலைகளை துவக்க போகிறார். இதனால் சூர்யா 41 படத்தை முடித்த பிறகு அயலான் பட டைரக்டர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, சூர்யா 41 படத்தை முடித்த பிறகு, வாடிவாசல் படத்தை துவங்குவதற்கு முன், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க போகிறாராம் சூர்யா.

கேஜிஎஃப் படத்திற்கு போட்டியா
சிறுத்தை சிவா - சூர்யா இணையும் படத்தின் ஷுட்டிங் ஜுலை மாதம் துவங்கப்பட உள்ளதாம். இது பீரியாடிக் ஆக்ஷன் படமாக எடுக்கப்பட உள்ளதாம். அது மட்டுமல்ல இந்த படத்தை கேஜிஎஃப் படத்தை போலவே இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் சூர்யா 41 படத்தின் வேலைகளை முடித்த கையோடு சூர்யா, இந்த படத்தின் வேலைகளில் இறங்கி விடுவார் என கூறப்படுகிறது.

வெயிட்டிங்லயே வெறியேறுதே
சிறுத்தை சிவா - சூர்யா முதல் முறையாக இணையும் படம் இது என்பதால் வேற லெவலில் எடுக்க பிளான் செய்திருக்கிறார்களாம். கேஜிஎஃப் படத்தையே மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டமாகவும், செம ஆக்ஷன் காட்சிகளுடனும் இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ளார்களாம். ஏற்கனவே கமலின் விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்ற தகவலே ரசிகர்களை வேற லெவலில் எதிர்பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில் இப்படி ஒரு தகவல் வெளியாகி உள்ளதால், சூர்யாவின் ஒவ்வொரு படங்களுமே பல மடங்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்து வருகின்றனர்.

கோலிவுட்டில் பிரசாந்த் நீல்
கேஜிஎஃப் ரேஞ்சிற்கு படம் இயக்க பிளான் போடுவதால் சிறுத்தை சிவாவை கோலிவுட்டில் பிரசாந்த் நீல் என்று இப்போதே ரசிகர்கள் புகழ துவங்கி விட்டனர். சூர்யா போன்ற மாஸ் ஹீரோ நடித்தால், படமும் நிச்சயம் மாசாக தான் இருக்கும். அதுவும் 2 பாகங்களாக வர உள்ளதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.