»   »  கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: 2 ஆண்டுகளுக்கு முன்பே சரியாக கணித்த ஜீனியஸ்

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: 2 ஆண்டுகளுக்கு முன்பே சரியாக கணித்த ஜீனியஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு 2015ம் ஆண்டிலேயே ஒருவர் சரியான பதில் அளித்தது தற்போது தெரிய வந்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் 2015ம் ஆண்டு வெளியானது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று கேட்டனர்.


அந்த கேள்விக்கு 2 ஆண்டுகள் கழித்து தற்போது பாகுபலி 2 படம் மூலம் பதில் கிடைத்துள்ளது.


கட்டப்பா

கட்டப்பா

கோரா இணையதளத்தில் பெங்களூரை சேர்ந்த சுஷாந்த் தாஹால் என்பவர் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி பதில் அளித்துள்ளார்.


வியப்பு

வியப்பு

கோரா இணையதளத்தில் சுஷாந்த் அளித்துள்ள பதில் தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. காரணம் அவர் சரியாக கணித்துள்ளார். அவர் தனது பதிலில் கூறியிருப்பதாவது, அமரேந்திர பாகுபலி மற்றும் பல்லாள தேவன் ஆகியோர் தேவசேனா மீது காதல் கொள்கிறார்கள். ஆனால் தேவசேனா அமரேந்திர பாகுபலியை தேர்வு செய்கிறார்.


பல்லாள தேவன்

பல்லாள தேவன்

விரும்பிய பெண் மற்றும் ராஜ்ஜியத்தை இழந்த பல்லாள தேவன் கடுப்பாகி தனது தந்தையுடன் சேர்ந்து அமரேந்திர பாகுபலிக்கு எதிராக சதி செய்கிறார். ராணி சிவகாமியிடம் பேசுகிறார். அதன் பிறகு சிவகாமி கட்டப்பாவை அழைத்து அமரேந்திர பாகுபலியை கொல்ல உத்தரவிடுகிறார்.
கொலை

கொலை

கட்டப்பாவுக்கு அமரேந்திர பாகுபலியை மிகவும் பிடிக்கும் என்றாலும் ராணியின் உத்தரவை தட்ட முடியாமல் பாகுபலியை கொலை செய்கிறார். இதை நினைத்து அவர் வாழ்நாள் முழுவதும் வருந்துகிறார்.


சிவகாமி

சிவகாமி

கட்டப்பா அமரேந்திர பாகுபலியை கொன்ற பிறகே பல்லாள தேவனின் உண்மையான நேக்கம் ராணி சிவகாமிக்கு தெரிய வருகிறது. பல்லாள தேவன் ராஜ்ஜியத்தை தன் வசப்படுத்த, குழந்தையை கொல்ல முயற்சிக்கிறார். இது தான் நான் கணித்த கதை என்று சுஷாந்த் தெரிவித்துள்ளார்.


ஆச்சரியம்

ஆச்சரியம்

2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை சரியாக கணித்த சுஷாந்தை பலரும் பாராட்டுகிறார்கள். மேலும் அவரின் பதிலையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.


English summary
A guy named Sushant Dahal has guessed the answer for 'Why did Kattappa kill Baahubali?' in july 2015 itself and his guess is very accurate.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil