»   »  எனக்கென யாரும் இல்லையே... இது அனிருத்தின் காதலர் தின பரிசு!

எனக்கென யாரும் இல்லையே... இது அனிருத்தின் காதலர் தின பரிசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதலர் தினப் பரிசு என சிம்பு - நயன்தாராவின் சிறு வீடியோ நேற்று வெளியானது. அதைத் தொடர்ந்து, அனிருத் ஒரு காதலர் தின ஸ்பெஷல் வெளியிட்டுள்ளார்.

அவர் இசையில் விரைவில் வரவிருக்கும் ஆக்கோ படத்தின் ஒற்றைப் பாடலை காதலர் தின பரிசாக வெளியிட்டுள்ளார்.

This is Anirudh's Valentine Day gift

ரெபில் ஸ்டுடியோஸ் தீபன் பூபதி, ரத்தேஷ் வேலு தயாரிப்பில் ஷாம் இயக்கும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள, "எனக்கென யாரும் இல்லையே..." என்ற இந்த பாடலை ‘அதாரு அதாரு...' புகழ் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

மெரசலாகிட்டேன் மூலம் ஹாட் பாடகராகவும் மாறிவிட்ட அனிருத் இப்பாடலைப் பாடியுள்ளார்.

"காதலுக்காக காத்திருப்பவர்கள், காதல் இல்லாதவர்கள், காதலில் கசந்து போனவர்கள் என அனைவருக்கும் இப்பாடலை டெடிகேட் செய்கிறோம். அனைவரும் முணுமுணுக்கும் ஒரு பாட்டாய் இது இருக்கும்..," என்கிறார் பாடலை எழுதிய விக்னேஷ் சிவன்.

English summary
Anirudh has released a single track today as Valentine Day gift.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil