»   »  'நான் கடவுள்' ராஜேந்திரன் மொட்டை ராஜேந்திரனான சோகக் கதை தெரியுமா?

'நான் கடவுள்' ராஜேந்திரன் மொட்டை ராஜேந்திரனான சோகக் கதை தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் கடவுள் புகழ் ராஜேந்திரன் மொட்டை ராஜேந்திரன் ஆனது எப்படி என்று தெரியுமா?

இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படம் மூலம் பிரபலமானவர் மொட்டை ராஜேந்திரன். முன்பு ஸ்டண்ட் கலைஞராக இருந்த அவர் தற்போது காமெடியில் கலக்கி வருகிறார்.

ராஜேந்திரனின் பெயரை சொன்னாலே அவரது மொட்டைத் தலை தான் நினைவுக்கு வரும். அவருக்கும் ஒரு காலத்தில் தலைநிறைய முடி இருந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மலையாள படம் ஒன்றில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியுள்ளார்.

This is how Rajendran became Mottai Rajendran

சண்டைக் காட்சிப்படி ராஜேந்திரன் குளத்தில் குதிக்க வேண்டும். அவரும் குதித்துள்ளார். தொழிற்சாலை கழிவுகள் அதிக அளவில் கலந்து மாசு அடைந்திருந்த அந்த குளித்தில் குதித்த ராஜேந்திரனுக்கு உடலில் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது.

அதன் பிறகே அவரது தலைமுடி கொட்டி மொட்டையாகியுள்ளது. மேலும் அவரது புருவம் மற்றும் கண் இமைகளில் இருந்த முடியும் கொட்டிவிட்டது. முடியெல்லாம் கொட்டி மொழுக்கென்று இருக்கும் ராஜேந்திரனுக்கு மொட்டை ராஜேந்திரன் என்ற பெயர் நிலைத்துவிட்டது.

குளத்தில் குதித்ததால் அவரின் குரலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிப்படுகிறது.

English summary
Actor Rajendran became Mottai Rajendran after he jumped into a polluted pond for a stunt scene in a Malayalam movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil