twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜா பாடல்களை சுட்டுட்டு அவர் மீதே பழிபோடும் இசையமைப்பாளர்

    By Siva
    |

    Recommended Video

    இளையராஜா பாடல்களை சுட்டுட்டு அவர் மீதே பழிபோடும் இசையமைப்பாளர்

    சென்னை: இது இளையராஜாவின் தவறு என்று இளம் இசையமைப்பாளப் சபீர் அகமது தெரிவித்துள்ளார்.

    புதுமுகம் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ரியோ ராஜ், விக்னேஷ்காந்த், ஷிரின், நாஞ்சில் சம்பத், ராதாரவி, மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.

    This is Ilaiyaraja sirs fault: Shabir Ahmad

    சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்திற்கு சபீர் அகமது இசையமைத்துள்ளார்.

    இசை வெளியீட்டு விழா மேடையில் பேசிய சபீர் அகமது கூறியதாவது,

    தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலேயே பாட்டை கேட்டால் தான் நான் தூங்குவேன். எனக்கு 12 வயது இருக்கும்போது கீ போர்டு வாங்கிக் கொடுத்தார்கள். நான் வாசித்த முதல் டியூனே தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே தான். அந்த பாடல் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதனால் இது இசைஞானி இளையராஜா சாரின் தவறு. ஏனென்றால் அவர் நம்மை அந்த அளவுக்கு பாதித்துள்ளார். இதை மாற்ற முடியாது.

    ராமநாதன் சார், எம்.எஸ். விஸ்வநாதன் சார், இளையராஜா சார், ரஹ்மான் சார் இல்லாமல் தமிழ் திரையிசை இல்லை. என் தலைமுறை இசையமைப்பாளர்கள் அவர்களை பார்த்து இன்ஸ்பையர் ஆகியுள்ளோம். என் படத்தில் இளையராஜா சார் பாடலை இரண்டு இடங்களில் பயன்படுத்தியுள்ளேன் என்பதை பெருமையாக சொல்கிறேன் என்றார்.

    96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியதை இளையராஜா விமர்சித்திருந்தார். தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் தனது பாடல்களை பயன்படுத்துவது அவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சபீர் அகமதோ நான் இளையராஜா சார் பாடல்களை பயன்படுத்தியுள்ளேன் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

    நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தை தயாரித்துள்ளதோடு அதில் கவுரவத் தோற்றத்திலும் வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படக்குழுவை வாழ்த்த கனா குழு வந்திருந்தது.

    சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் என்றால் அது நிச்சயம் சமூக அக்கறையுள்ள வித்தியாசமான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா நிறைவேற்றும் என்று நம்புவோமாக.

    English summary
    Nenjamundu Nermaiundu Odu Raja music director Shabir Ahmad said that he has used Ilaiyaraja songs in two places in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X