»   »  வெண்ணிலா பக்கத்தில் என்னை புதைச்சிடுங்க ப்ளீஸ்: நந்தினி கணவரின் கடைசி ஆசை

வெண்ணிலா பக்கத்தில் என்னை புதைச்சிடுங்க ப்ளீஸ்: நந்தினி கணவரின் கடைசி ஆசை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெண்ணிலா பக்கத்தில் தன்னை புதைக்க வேண்டும் என்று நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நந்தினியின் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்யும் முன்பு அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

கடிதங்கள்

கடிதங்கள்

கார்த்திக் இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார். ஒரு கடிதத்தில் தான் தற்கொலை செய்ய நந்தினியின் தந்தை ராஜேந்திரனே காரணம் என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அக்கா

அக்கா

கார்த்திக் தன் அக்கா ரம்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ரம்யா அம்மாவ கூப்பிட்டு போய் வைச்சிக்கோ. நீ அம்மாவ பார்த்துக்கோ என தெரிவித்துள்ளார்.

முடியல

முடியல

என்னால இதுக்கு மேலே வாழ முடியவில்லை. எனக்கு வாழவும் தெம்பு இல்லை. இத்தனை நாள் பிணமாக தான் வாழ்ந்தேன்.இனிமேல் நான் இருப்பது சரியில்லை. என்னால் வாழ முடியவில்லை. இனிமேல் நான் இருப்பது வேஸ்ட். என் கௌரவம், மரியாதை போச்சு. அம்மாவ பார்த்துக்கோ என கார்த்திக் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடைசி ஆசை

கடைசி ஆசை

என் இறுதி ஆசை. வெண்ணிலாவை புதைத்த இடத்தில் பக்கத்தில் என்னையும் புதைக்க வேண்டும். வெண்ணிலா பக்கத்தில் என்னை புதையுங்கள் ப்ளீஸ் என கார்த்திக் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
This is Karthik's last wish Actress Nandhini's husband Karthik has expressed his last wish in a letter written to his sister Ramya before he took his life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil