போர்னோகிராபி பிரச்சனை அல்ல.. எனக்கு விடுத்தது கொலை மிரட்டல்.. பிக் பாஸ் பிரபலம் அதிரடி விளக்கம்
சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சனம் ஷெட்டிக்கு வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
இந்நிலையில், தனக்கு வந்தது போர்னோகிராபி சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை என்றும் கடந்த சில மாதங்களாக கொலை மிரட்டல் விடுத்து வந்தார் என்றும் அதிரடியாக அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தி உள்ளார் நடிகை சனம் ஷெட்டி.
அடையாறு சைபர் கிரைமில் சனம் ஷெட்டி அளித்த புகாரை விரைந்து விசாரித்த போலீசார் ராய் ஜான் பால் என்பவரை கைது செய்துள்ளனர்.

கொலை மிரட்டல்
பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சனம் ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் மர்ம நபர் ஒருவர் ஆபாச மெசேஜ் அனுப்பி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தனக்கு அவர் போர்னோகிராபி சம்பந்தப்பட்ட தொல்லை கொடுக்கவில்லை என்றும் தனக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்து வந்தார் என்றும் விளக்கி உள்ளார்.

அலட்சியப்படுத்தினேன்
கடந்த சில மாதங்களாகவே ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் மிகவும் மோசமான கொலை மிரட்டல்களை விடுத்து வந்தார். ஆனால், அதை நான் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அப்படியே அலட்சியமாக விட்டு வந்தேன். ஆனால், எப்போ என் பிரைவேட் நம்பருக்கு கொலை மிரட்டல் மெசேஜ்களை அனுப்பினானோ அப்போதே சுதாரித்துக் கொண்டேன் எனக் கூறியுள்ளார்.

ராய் ஜான் பால் கைது
தனக்கும் தன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், இதுதொடர்பாக அடையாறில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தேன். அவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் துரிதமாக செயல்பட்டு ராய் ஜான் பாலை கைது செய்துள்ளனர். தமிழ்நாடு காவல்துறைக்கு என் நன்றி என சனம் ஷெட்டி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சும்மா விடக்கூடாது
சமூக வலைதள சீண்டல்கள் தானே என சும்மா விட்டு விடாதிங்க, தொடர்ந்து உங்களை இதுபோன்று யாராவது எந்த ரீதியிலாவது சைபர் தாக்குதல் நடத்தினால் உடனடியாக அவர்களுக்கு எதிராக ஆக்ஷன் எடுக்க தயங்காதீர்கள், இதுபோன்ற குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது எனக் கூறியுள்ள சனம் ஷெட்டி தனது ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தனக்கு ஆதரவாக பேசிய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











