பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக சரவணனுக்கு இந்த ஒரே ஒரு நன்மை மட்டும்தான் நடந்ததாம்

சென்னை: தற்சமயம் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எப்போதும் போல கமல் ஹாசன் இம்முறையும் கலக்கலாக தொகுத்து வழங்குகிறார்.

இந்த சீசனில் விக்ரமன், ஷிவின் மற்றும் தனலட்சுமி நல்ல பெயரை சம்பாதித்து மக்கள் மனதில் இடம் பிடித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் முந்தைய பிக் பாஸ் சீசனில் பங்கேற்ற நடிகர் சரவணன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.

சரவணன்

சரவணன்

ஆரம்பத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் வகித்த சரவணன் பின் சினிமாவில் நடிக்க வந்தார். அவர் நடிக்க வந்த புதிதில் பார்ப்பதற்கு நடிகர் விஜயகாந்த் போலவே இருக்கிறார் என்று அவரை அனைவரும் பார்த்தனர். தன்னுடைய கேரியரின் தொடக்க காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் சரவணன். குறிப்பாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினி மற்றும் கமலஹாசனை வைத்து இயக்குவதற்கு முன்னர் சில படங்களில் சரவணன் கதாநாயகனாக வைத்து இயக்கினார்.

இடைவெளி

இடைவெளி

பின்னர் அவருடைய படங்கள் சில தோல்வி அடையவே வாய்ப்புகள் இல்லாமல் திரைத்துறையை விட்டு விலகி இருந்தார். அப்போது சேது என்கிற வெற்றி படத்தை கொடுத்திருந்த பாலா தனது இரண்டாவது படமான நந்தாவை எடுக்கும் பொழுது அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் சரவணனை நடிக்க வைத்தார். அதில் இணை இயக்குநராக பணிபுரிந்த அமீர் பின்னர் தன்னுடைய பருத்திவீரன் படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார்.

சித்தப்பா

சித்தப்பா

இன்றுவரை அனைவரும் சித்தப்பா என அழைக்கக் கூடிய அளவிற்கு அந்தக் கதாபாத்திரம் அனைவரையும் சென்றடைந்தது. அதன் பின்னர் பெரிய வாய்ப்புகள் திரைப்படங்களில் அமையாவிட்டாலும் பிக் பாஸில் சீசன் மூன்றில் கலந்து கொண்டார். பிக் பாஸின் மொத்த வரலாற்றில் வெளியேற்ற படாத வித்தியாசமான வகையில் சரவணன் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கு காரணமாக அவர் கமல ஹாசனை ஒருமையில் பேசி விட்டார் என்று கூறப்பட்டது. இருப்பினும் உண்மையான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

பிக் பாஸ் சரவணன்

பிக் பாஸ் சரவணன்

அவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில், பிக் பாஸில் கலந்து கொண்டதால் எந்த ஒரு பயனும் இல்லை, பட வாய்ப்புகளோ வேறு எந்த விதமான வளர்ச்சியும் இல்லை என்றும் அதில் கலந்து கொண்டதில் ஒரே ஒரு லாபம் என்னவென்றால், சிறிய குழந்தைகள் கூட என்னை பார்த்தால் பிக் பாஸ் சரவணன் என்று அழைக்கும் அளவிற்கு குழந்தைகளிடம் என்னை எடுத்துச் சென்றது அந்த நிகழ்ச்சி என்று சரவணன் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X