»   »  'இதாங்க உண்மையான இளையராஜா!'

'இதாங்க உண்மையான இளையராஜா!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

- இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன்

'நீங்க நினைக்கிறாப்பல இளையராஜா இருக்கவே மாட்டார், பேசிக்கிட்டிருக்கப்ப அவர் அடிக்கிற ஒவ்வொரு கமென்ட்டும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். ஒழுக்கமான, சிறிதும் பந்தாவே பண்ணாத ஆள், இளையராஜா.

மெல்லத் திறந்தது கதவு எம் .எஸ். விஸ்வநாதனுக்காக இளையராஜா கொடுக்க நினைத்த ஒரு படம். "எம் எஸ் வி ட்யூன் போடுவார், நான் கம்போஸ் பண்ணுவேன், நீ இயக்குற," என்று என்னிடம் சொன்னார் இளையராஜா. தயாரிப்பு ஏ வி எம்!

This is Real Ilaiyaraaja - R Sundarrajan shares experience

வழக்கமா பிரசாத் ஒலிப்பதிவு கூடத்துலதான் செண்டிமென்ட்டா எல்லா இசையையும் கம்போஸ் பண்ணுவார் ராஜா. ஆனா ஏ வி எம் நிறுவனம், "நம்மகிட்டயே தியேட்டர் இருக்கப்ப நீங்க ப்ரசாத்ல பண்ணா நல்லாருக்காது"ன்றாங்க.

நானே கொஞ்சம் திகைத்து, "சரிதான் ராஜா ஒத்துக்க மாட்டாரு"ன்னு பயந்துக்கிட்டிருந்தேன். பார்த்தால் ராஜா சொல்றாரு, "50 வருஷத்துக்கு மேல படம் எடுத்துக்கிட்டிருக்கிற தொழில் பக்தி கொண்ட ஒரு கம்பெனி, அவங்க சொன்னா மீற முடியாது, அதான் எல்லா வசதியும் அங்க இருக்குன்னுட்டாங்கள்ல? அங்கேயே வச்சுக்கலாம்.. காலைல ஏவிஎம்க்கு வந்துடு!"

எனக்கா ரொம்ப சந்தோஷமா போச்சு. ஏன்னா சாலி கிராமத்துலருந்து ஏவிஎம்க்கு கார்ல பத்து நிமிஷத்துக்குள்ள போயிடலாம், அதுவும் இளையாராஜாவுக்கு காலைலன்னா அது ஏழு மணி. பிரசாத்ன்னா நாம் விடிகாலைல எழுந்திரிச்சி அடிச்சி பிடிச்சி ஓடணும்.

ஆனா விதி பாருங்க, அன்னிக்கு பார்த்து இந்த டிரைவர் காலைல வரவே இல்ல. அப்பல்லாம் இந்த போன் வசதி எல்லோருக்குங் கிடையாதில்ல, லேட்டாப் போனா வம்பு, எனக்கு கார் ஓட்டத் தெரியும், ஆனா கார் சாவிய ட்ரைவர் எடுத்துக்கிட்டுப் போயிருந்திருக்காரு. பார்த்தேன், அப்பா சைக்கிள் சும்மா நின்னுக்கிட்டிருந்துச்சி.. எடுத்து ஒரு மிதி, பதினஞ்சு நிமிஷத்துக்குள்ள ஏவிஎம் வாசல் போயிட்டேன்.

அங்க பார்த்தா இளையராஜா ரோட்டுல நடந்து வந்திக்கிட்டுருந்தாரு. "கார் வடபழனி பஸ் ஸ்டாண்டுக்கு கொஞ்சம் முன்னாடி ப்ரேக்டவுனாயிடுச்சி. இவ்வளவு காலைல நம்மள அடையாளம் கண்டு பிடிச்சி யார் என்ன செஞ்சுருப் போறாங்கன்னு நடந்தே வந்துட்டேன், அதுசரி நீ என்னய்யா சைக்கிள்ள வர்ற ?"ன்னாரு. என் கதையைச் சொன்னேன், சரி சரி டபுள்ஸ் அடிப்பல்ல? நான் கேரியர்ல ஒக்காந்துக்கறேன், விடுய்யான்னு ஜங்க்ன்னு அவர் பின்னால ஒக்கார, நாங்க ரெண்டு பேரும் ஸ்டூடியோவுக்குள்ள ஜாலியா சைக்கிள்ல போய் இறங்கினோம், அவ்வளவுதாங்க இளையராஜா."

-இசைஞானி பக்தர்கள் பேஸ்புக் பக்கத்திலிருந்து...

English summary
Here is an experience of veteran director R Sundararajan about music director Ilaiyaraaja.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil