»   »  பலருக்கும் இதுதான் ஃபர்ஸ்ட் டைம்!

பலருக்கும் இதுதான் ஃபர்ஸ்ட் டைம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சூர்யாவை திருமணம் செய்து கொண்டபிறகு நடிப்புக்கு குட்-பை சொன்ன ஜோதிகா, 7 வருடங்களுக்குப் பிறகு '36 வயதினிலே' படத்தில் நடித்தார். திருமணமான பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்தும் உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவிலிருந்து மாறி சராசரியான கதையை தேர்வு செய்ய எண்ணியபோது 'குற்றம் கடிதல்' பட இயக்குநர் பிரம்மா சொன்ன கதை பிடித்துப்போனதால் அதில் நடிக்கச் சம்மதித்தார்.

ஜோதிகா, நடிப்பில் உருவாகியுள்ள 'மகளிர் மட்டும்' வரும் 15-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படம் தவிர பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஜோதிகா.

மணிரத்னம் படத்தில் :

மணிரத்னம் படத்தில் :

மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் ஜோதிகா. மணிரத்னம் தயாரித்த 'டும் டும் டும்' படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஜோதிகா இதுவரையிலும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்ததில்லை.

அக்கா கதாபாத்திரம் :

அக்கா கதாபாத்திரம் :

மணிரத்னம் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கவிருக்கும் ஜோதிகா இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் அக்காவாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல நட்சத்திரங்கள் :

பல நட்சத்திரங்கள் :

'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமி, ஃபகத் பாசில், விஜய்சேதுபதி, சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலானோரும் நடிக்கவிருக்கிறார்கள்.

முதல்முறையாக இணைகிறார்கள் :

முதல்முறையாக இணைகிறார்கள் :

மணிரத்னம் படத்தில் நடிப்பது ஜோதிகாவுக்கு மட்டும் முதல்முறை அல்ல. நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் மணிரத்னத்துடன் முதல்முறையாக கை கோர்க்கிறார்கள்.

கனவு நிறைவேறியது :

கனவு நிறைவேறியது :

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 'இறுதியாக, எனது கனவு நனவாகப் போகிறது. இந்தப் படத்தைப் பற்றிய வேறு தகவல்களை நான் சொல்லக்கூடாது. ஆனால், மணி சாரின் முந்தைய படங்களில் இருந்து இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இந்த நேரத்தில் எனக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Jyothika is signed to act in Maniratnam's next film. This is the first film for many actors to join hands with Mani Ratnam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil