»   »  அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்தது ஏன் தெரியுமா?

அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்தது ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எப்போது ரசிகர்கள் ஒரு நடிகரை பார்த்து 'என்னால் தான் நீ இந்த இடத்தில் இருக்கிறாய்...' என்று சொல்லும் அளவு வந்துவிட்டாலே நடிகர்கள் ரசிகர்களை அடக்குவது அவசியம். இல்லாவிட்டால் அது குறிப்பிட்ட நடிகருக்கு கெடுதலாக தான் முடியும்.

ஒருமுறை அஜித் மங்காத்தா ஷூட்டிங்கில் இருந்தபோது நடந்த சம்பவம். ஸ்பாட்களை தேடிக் கண்டுபிடித்து அஜித்தைப் பார்க்க வேண்டும் என்று ரசிகர் கூட்டம் மொய்க்கும். ஷூட்டிங்குகளுக்கு பாதுகாப்பு தருபவர்களுக்குதான் பெரிய தலைவலியாக இருக்கும். இது தொடர்ந்துகொண்டே இருந்தபோது தகவல் அஜித்துக்கு தெரிய வர அவரே வந்து ரசிகர்களை சந்தித்தார்.

This is the reason behind Ajith dissolves fan clubs

சந்தித்தபோது அஜித் கேட்ட முதல் கேள்வி, "நீங்கள்லாம் எங்கே வேலை செய்யறீங்க?", என்பதுதான். ஆளாளுக்கு ஒவ்வொரு வேலையாக சொன்னார்கள்.

"அதேபோல் எனக்கும் இது என்னுடைய வேலை பார்க்கும் இடம். இதனால் எத்தனையோ பேர் வேலை பாதிக்கப்படுகிறது. தயாரிப்பாளருக்கும் நஷ்டம் வரும்,'' என்று பொறுமையாக எடுத்துச் சொன்னார் அஜித்.

அப்போது அந்த கூட்டத்தில் ஒருவர், "நாங்க இல்லைன்னா நீங்க இந்த இடத்துக்கு வந்திருக்க முடியுமா?'' என்று கேட்க, அஜித் அவரை பற்றி விசாரிக்க அவர் ரசிக மன்றத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வருகிறது. அடுத்த நாளே ரசிக மன்றங்களை கலைப்பதாக முடிவெடுக்கிறார் அஜித்.

இன்றும் அஜித் சொல்வது இதுதான், "நான் கலைத்தது ரசிகர் மன்றங்களைத்தான். ரசிகர்களை அல்ல. உண்மையான ரசிகர்கள் இதனை புரிந்துகொள்வார்கள்."

English summary
Here is the reason behind Ajith Kumar's decision of dissolving fans club.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos