என்னது...அஜித்தின் வலிமை படத்திற்கு யு சான்று கிடைக்கலியா...இது தான் காரணமா ?
சென்னை : அஜித் நடித்த வலிமை படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 14 ம் தேதி பொங்கல் தினத்தன்றே வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், இதன் முதல் நாள் முதல் ஷோ நள்ளிரவு 1.30 மணிக்கே திரையிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியாக உள்ள அஜித் படம் என்பதாலும், வலிமை படத்தின் அசத்தல் அப்டேட்களும் எப்போது படத்தை ரிலீஸ் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பை அனைவரிடமும் ஏற்படுத்தி உள்ளது.

யு சான்று கிடைக்கல
வலிமை படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் லேட்டஸ்ட் ஹாட் நியூசாக வலிமை படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்று வழங்கி உள்ளதாம். வலிமை படத்திற்கு Universal யு சான்று கிடைக்காததால் படக்குழு ஏமாற்றம் அடைந்துள்ளதாம்.

இது தான் காரணமா
வலிமை படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அதிக அளவிலான சண்டை காட்சிகள், போதைப் பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது ஆகியவற்றால் தான் இந்த படத்திற்கு யு சான்று கிடைக்காமல் போனதாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில்லை
இருந்தாலும் சென்சார் சான்று கிடைத்தது பற்றியோ, ரிலீஸ் தேதி பற்றியோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதே சமயம் வலிமை படத்தை திரையிடுவதற்காக தியேட்டர்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறதாம்.

இவ்வளவு நேரம் ஓடுதா
அஜித், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, யோகி பாபு நடித்துள்ள வலிமை படம் மொத்தம் இரண்டு மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடுகிறதாம். அஜித்தின் பைக் ரேஸ், அதிரடி ஆக்ஷன் காட்சிகளை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையில் படத்தின் நேரத்தை குறைக்க படக்குழு விரும்பவில்லையாம்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
வலிமை படத்திற்கு சென்சார் சான்று கிடைத்து விட்டதால், எந்த நேரத்திலும் வலிமை படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்படலாம் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். படத்தின் சென்சார் சான்று, ரிலீஸ் தேதி, டிரைலர் ரிலீஸ் தேதி போன்றவை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











