Don't Miss!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- News
சபாஷ்.. விவசாயக் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் அல்டிமேட்டிலிருந்து வெளியேற இதுதான் காரணம்… வனிதாவே போட்ட பதிவு !
சென்னை : பிக்பாஸ் அலடிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை வனிதா கூறியுள்ளார்.
14 போட்டியாளர்களுடன் தொடங்கி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
கடந்த வாரம் நடந்த டபிள் எவிக்ஷனில் தாரிக், அபிநய் வெளியேறினார்கள்.

பிக் பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்த சூட்டோடு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணிநேரமும் டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியானது. முந்தைய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களே இதில் கலந்து கொள்வார்கள் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார்.

காஃபிக்கு சண்டை
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வனிதா, வந்த நாளிலிருந்தே பிக் பாஸ் வீட்டின் முதலாளி போல செயல்பட்டு வந்தார். வந்ததும் வராததுமாக காஃபி பொடிக்காக சண்டை போட்டு பிரச்சினை கிளப்பினார். அது மட்டும் இல்லாமல் எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதை செய்யாமல் மற்றவர்களிடம் வாக்குவாதம் செய்து அட்டகாசம் செய்தார்.

மதிப்பெண்ணே இல்லை
போனவாரம் பிக் பாஸ்வீட்டின் கேப்டனாக இருந்த வனிதாவிற்கு எவ்வளவு மதிப்பெண் தருவீர்கள் என கமல் கேட்டார். இதற்கு பலரும் அவர் கேப்டனாக இருந்து எதுவுமே செய்யவில்லை அவருக்கு மதிப்பெண்ணே கொடுக்கக்கூடாது என கூறி ஒன்னு, இரண்டு மதிப்பெண்களை கொடுத்தனர். இதனால், ஆத்திரத்தின் உச்சத்திற்கே போய்விட்டார் வனிதா.

ஆறுதல் கூறிய பிக்பாஸ்
இதையடுத்து, கமல்ஹாசனும் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து மிகவும் சோர்வாக இருந்த வனிதா, வீட்டை விட்டு அனுப்பும் படி பிக் பாஸிடம் கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்திய பிக் பாஸ், தைரியமாக இருங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசுங்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

வனிதா வெளியேறினார்
வீட்டில் ஒரு நாள் தாக்குபிடித்த வனிதா மீண்டும், கமலுக்காகத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கே வந்தேன், இனியும் இந்த வீட்டில் இருக்க முடியாது , வெளியே போக வேண்டும் என அடம்பிடித்தார். பிக் பாஸ் எவ்வளவு சமாதானப்படுத்தியும் முடிவை மாற்றிக்கொள்ளாத வனிதா வீட்டை விட்டுவெளியேறினார்.

வனிதா அக்கா பயந்துட்டா
வனிதா வெளியேறியதை அடுத்து, ட்விட்டரில் கருத்துக்கள் பறந்தன. அதில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்ற பயத்தில் வனிதா அக்கா வெளியே போய்விட்டார்கள் என இணையத்தில் ரசிகர்கள் தாறுமாறான கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

வெளியேற இதுதான் காரணம்
இந்நிலையில், வனிதா தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். அதில், ரம்யாகிருஷ்ணன் வருவதால் நான் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறவில்லை. பொய்யான தகவலை பரப்பாதீர்கள். என்னுடைய உடல்நிலையையும், மனநிலையையும் கருத்தில் கொண்டுதான் நான் இந்த முடிவை எடுத்தேன். என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு எனக்கு உதவிய ஹாஸ்டார் நிறுவனத்திற்கும், பிக் பாஸ் அல்டிமேட் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.