»   »  இதனால் தாம்பா அஜீத் ஓட்டு போட வரவில்லையாம்

இதனால் தாம்பா அஜீத் ஓட்டு போட வரவில்லையாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் படத்தின் டப்பிங்கில் பிசியாக இருந்ததாலும், சங்கம் மீது கொண்ட அதிருப்தியாலும் அஜீத் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் விஷாலின் பண்டவர் அணியும், சரத்குமார் தலைமையிலான அணியும் நேருக்கு நேர் மோதின. இதில் விஷால் அணி வெற்றி பெற்றுள்ளது.

This is why Ajith didn't cast vote yesterday

நேற்று ஏராளமான நடிகர், நடிகைககள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், விஜய்யும் காலையிலேயே வந்து வாக்களித்துவிட்டு சென்றனர். 'தல' அஜீத் முந்தைய நாள் இரவு 3 மணிவரை வேதாளம் படத்தின் டப்பிங்கில் பிசியாக இருந்தாராம்.

அதனால் மதியத்திற்கு மேல் அவர் வாக்களிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கடைசி வரை வாக்களிக்க வரவே இல்லை. வாக்குச்சாவடியில் இரு அணியினருக்கும் இடையே நடந்த மோதலை பார்த்து அஜீத் அதிருப்தி அடைந்தாராம்.

மேலும் தான் சிக்கலில் இருந்த போது சங்கம் உதவவில்லையே என்ற அதிருப்தி வேறாம். இதனால் தான் அவர் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

English summary
People are telling some reasons as to why Ajith didn't cast his vote in the Nadigar sangam election.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil