சென்னை: விக்ரம் பிரபுவின் மகன் விராட்டின் பிறந்தநாளுக்கு பிரபாஸ் பரிசு கொடுத்துள்ளார்.
நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட் இன்று தனது பிறந்தாளை கொண்டாடியுள்ளார். விராட்டுக்கு பாகுபலி என்றால் மிகவும் பிடிக்கும். இது பாகுபலியான பிரபாஸ் காதுகளுக்கு சென்றுள்ளது.
இதையடுத்து பிரபாஸ் தான் பாகுபலி படத்தில் பயன்படுத்திய வாள் போன்று சிறியதாக ஒரு வாள் செய்து அதில் தனது கையெழுத்து போட்டு விராட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த வாளை விராட் பிடித்திருக்கும் புகைப்படத்தை விக்ரம் பிரபு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பாகுபலியே தனக்கு வாளை அனுப்பி வைத்த மகிழ்ச்சியில் உள்ளாராம் விராட்.
பிரபாஸை சும்மாவா டார்லிங் என்கிறார்கள்!
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.