Don't Miss!
- Technology
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
- News
"நேரடி மோதல்" ஓபிஎஸ் அணி வேட்பாளர் யார்? மாலையில் நல்ல செய்தி சொல்லப்படும்.. வைத்திலிங்கம் அப்டேட்!
- Lifestyle
இந்திய ஆண்களுக்கு விந்தணு தரம் மற்றும் எண்ணிக்கை குறைய இந்த 5 விஷயங்கள்தான் முக்கிய காரணமாம்...!
- Automobiles
டொயோட்டாக்கு ஷாக் வைத்தியம் கொடுத்த இந்தியர்கள்.. நம்மாலையே நம்ம முடியல டொயோட்டாக்கு மட்டும் எப்படி இருக்கும்!
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Sports
"இன்னும் ஒரே ஒரு போட்டிதான்.. சுப்மன் கில்லால் இந்தியாவுக்கு ஆபத்து".. பாக். சீனியர் எச்சரிக்கை!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாட்ஷா 2 எடுக்க ரஜினி தயங்குவது இதனால்தான்... ஆனால் காத்திருக்கும் பாட்ஷா இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
சென்னை: ஹாலிவுட் படங்களின் தாக்கமோ என்னவோ, சமீப காலமாக இந்தியத் திரைப்படங்களிலும் இரண்டாம் பாகங்கள் ரிலீஸ் ஆகின்றன.
இந்தி சினிமாக்களில் இந்த டிரெண்ட் முன்னதாகவே இருந்தாலும், இப்போது தென்னிந்திய படங்களிலும் அதிகமான சீக்குவல்ஸை காண முடிகிறது. அந்தக் காலத்திலேயே இரண்டு பாகங்கள் வந்திருந்தாலும் இப்போதுதான் இது அதிகமாக டிரெண்ட் ஆகியுள்ளது.
விக்ரம், எந்திரன், விஸ்வரூபம், பாகுபலி, திரிஷ்யம், KGF, பில்லா, மாரி, வி.ஐ.பி போன்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆனது. அதனை தொடர்ந்து இந்தியன், புஷ்பா போன்ற படங்களின் இரண்டாம் பாகங்களும் தொடங்கப்பட்டன. வட சென்னை 2 எப்போது எடுக்கப்படும் என்று தெரியவில்லை.
பிக்பாஸ்
சீசன்
6
போட்டியாளர்கள்
இவர்கள்
தானா...இணையத்தில்
பரவும்
பிரபலங்களின்
லிஸ்ட்

பழைய படங்களின் சீக்குவல்ஸ்
விஸ்வரூபம், பாகுபலி, KGF, வட சென்னை, புஷ்பா போன்ற படங்களின் முதல் பகுதிகள் எடுத்த போதே இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்போடுதான் வெளிவந்தது. ஆனால் எதிர்ப்பார்ப்பின் அடிப்படையில் இரண்டாம் பாகங்கள் உருவாக்கப்பட்டு வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது திருஷ்யம் 2 மட்டும்தான். 2.O, பில்லா 2, விஸ்வரூபம் 2, மாரி 2, வி.ஐ.பி 2 போன்ற படங்கள் விமர்சன ரீதியாக பெயர்களை கெடுத்துக் கொண்டது. அதற்கு முற்றிலும் மாறாக வசூல் ரீதியாக பெரிய வெற்றி காணாத விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுத்து அதில் இமாலய வெற்றியை சந்தித்தார் கமல்.

அதிக சீக்குவல்ஸ்
தமிழில் அதிக இரண்டாம் பாகங்களில் நடித்த நடிகர்கள் என்றால் அது தனுஷ் மற்றும் கமல் ஹாசன்தான். மாரி 2, வி.ஐ.பி 2 ஏற்கனவே ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் வட சென்னை 2-உம் அவர் கை வசம் உள்ளது. அதே போல கமல் நடிப்பில் விஸ்வரூபம் 2 மற்றும் விக்ரம் வெளியானது. இந்தியன் 2 மேக்கிங்கில் இருப்பது போல, பாப்பனாசம் படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்கப்படும் என நம்பப்படுகிறது. இன்னொரு பக்கம் ரஜினி நடிப்பில் 2.O வந்து வசூல் செய்தாலும், விமர்சன ரீதியாக நல்ல பெயரை எடுக்கவில்லை

பாட்ஷா 2
KGF படம் ஏற்படுத்திய தாக்கம்தான் அதன் இரண்டாம் பாகத்தை இமாலய வெற்றியடையச் செய்தது. அதனால் பழைய பிளாக் பஸ்டர் திரைப்படங்களின் பிராண்டை பயன்படுத்தி வியாபாரம் செய்ய பலரும் எண்ணுகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படம் அவருடைய கேரியரிலேயே முக்கியமான படம். அதனுடைய இரண்டாம் பாகத்தை இயக்க ரொம்பவே ஆர்வமாக இருப்பதாக பாட்ஷா இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார். ஆனால் அந்தப் படத்தில் கை வைக்கக் கூடாது. பாட்ஷா என்பது ஒற்றைப் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று ரஜினி முன்னர் கூறியுள்ளாராம். ஒரு வேளை பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவருடைய எண்ணத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவருடைய அழைப்புக்காகத்தான் காத்திருக்கிறேன் என்றும் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.
Recommended Video

மூன்றாம் பாகம்
இரண்டாம் பாகங்களை விடுங்கள். ஏற்கனவே சில படங்கள் தங்களுடைய மூன்றாம் பாகத்தினையும் அறிவித்துள்ளது. 3.O, விக்ரம் 3 மற்றும் KGF 3 ஆகிய படங்கள் மூன்றாம் பாகங்களாக வரும் என அதன் முன்னோட்டங்கள் அதனதனுடைய இரண்டாம் பாகங்களிலேயே காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.