»   »  இதுனால தான் சல்மான் கான் திருமணம் செய்யவில்லையாம் மக்களே!

இதுனால தான் சல்மான் கான் திருமணம் செய்யவில்லையாம் மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் மோசமான கணவராக இருக்கக்கூடும் என்றும், அதனால் தான் திருமணம் செய்யவில்லை என்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் சல்மான் கான், சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்த பிரேம் ரத்தன் தன் பாயோ படம் தீபாவளி ஸ்பெஷலாக கடந்த 12ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழில் வெளியானது. படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.

படம் நிச்சயம் சில நூறு கோடியாவது வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமர்சனம்

விமர்சனம்

பிரேம் ரத்தன் தன் பாயோவில் சல்மான் கானை தவிர வேறு எதுவும் இல்லை. படத்தை பார்ப்பவர்கள் மூளையை பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை என்று விமர்சகர்கள் தெரிவித்தும் படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்துகிறது.

சோனம்

சோனம்

சல்மான் கான் திருமணம் செய்து கொண்டால் சிறந்த கணவராக இருப்பார் என்று சோனம் கபூர் தெரிவித்துள்ளார். ஆனால் சோனம் தெரிவித்தது தவறு என்று சல்மானே கூறியுள்ளார்.

சல்மான்

சல்மான்

நான் சிறந்த கணவராக இருப்பேன் என்று சோனம் சொல்வதில் சந்தேகம் தான். நான் தான் மோசமான கணவராக இருப்பேன். அதனாலேயே நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிறார் சல்மான்.

திருமணம்

திருமணம்

என்னை யார் திருமணம் செய்து கொண்டாலும் அவர் சந்தோஷமாக இருக்க மாட்டார். அந்த நபர் என்னுடன் சந்தோஷமாக இருக்க மாட்டார் என தெரிந்தும் ஏன் திருமணம் என்ற பெயரில் கொடுமைப்படுத்த வேண்டும். ஆனால் நான் நல்ல தந்தையாக இருப்பேன் என்று சல்மான் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Sonam Kapoor said that Salman Khan will make a great husband but Salman thinks that he would be the worst husband.
Please Wait while comments are loading...