ஏகே 61 ல் அஜித்திற்கு ஜோடி இவரா...அப்போ ரகுல் ப்ரீத் சிங் கிடையாதா?

சென்னை : ஏகே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடி, இது வரை சொல்லப்பட்ட யாரும் கிடையாதாம். புதிதாக ஒருவரை அஜித்திற்கு ஜோடியாக நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நடிகையும் படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி தயாரிப்பில் ஏகே 61 படத்தில் கடந்த ஒரு மாத காலமாக அஜித் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான செட்டில் இந்த ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

வித்தியாசமான அனுபவம்

வித்தியாசமான அனுபவம்

தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல பான் இந்தியா ரசிகர்களுக்கே இது வித்தியாசமான அனுபவமாக இருக்குமாம். அந்த வகையில் ஏகே 61 படத்தை முற்றிலும் மாறுபட்டதாக வினோத் எடுத்து வருகிறாராம். சென்னை மவுண்ட் ரோடு பேங்க் போன்று கிட்டதட்ட 9 ஏக்கரில் இந்த செட் அமைக்கப்பட்டுள்ளதாம். மிகுந்த பாதுகாப்புடன் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறதாம்.

இரட்டை வேடம் கிடையாது

இரட்டை வேடம் கிடையாது

இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லையாம். அதற்கு மாறாக இரண்டு மாறுபட்ட லுக்களில் நடிக்கிறாராம். வயதான காலேஜ் ப்ரொஃபசர் ரோலில் நடிக்கும் அஜித், ஸ்டையிலான செம ஃபிட்டான இளமை தோற்றத்திலும் நடிக்கிறாராம். வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட ஆக்ஷன், த்ரில்லர் படமாக தான் ஏகே 61 எடுக்கப்பட்டு வருகிறதாம்.

இவங்க யாருமே இல்லையா

இவங்க யாருமே இல்லையா

ஏகே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தபு நடிக்க உள்ளதாக முதலில் கூறப்பட்டது. பிறகு அதிதி ராவவ் நடிப்பதாகவும், சமீபத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி ஏகே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடி தபுவும் கிடையாதாம், ரகுல் ப்ரீத் சிங்கும் கிடையாதாம். பிரபலமான தென்னிந்திய நடிகை ஒருவர் தான் ஹீரோயினாக நடிக்க போகிறாராம்.

அப்போ இவர் தான் ஹீரோயினா

அப்போ இவர் தான் ஹீரோயினா

வழக்கமானவர்கள் இல்லாமல் புதிய காம்போ வேண்டும் என வினோத் நினைத்ததால் நடிகை மஞ்சு வாரியரை அஜித்திற்கு ஜோடியாக நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். இது அழுத்தமான கேரக்டர் என்பதால் அவரால் தான் சரியாக செய்ய முடியும் என நினைத்து, இந்த ஆண்டு துவக்கத்திலேயே மஞ்சு வாரியரிடம் பேசப்பட்டு விட்டதாம். ஆனால் சமீபத்தில் தான் அவர் ஓகே சொல்லி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாராம். மஞ்சு வாரியர் ஏற்கனவே தமிழில் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அஜித்துடன் புது காம்போ

அஜித்துடன் புது காம்போ

ஏகே 61 ஷுட்டிங்கில் ஏற்கனவே அஜித் நடித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் மஞ்சு வாரியரும் ஷுட்டிங்கில் கலந்து கொள்ள போகிறாராம். ஏகே 61 படத்தில் மஞ்சு வாரியர் நடிப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவர் நடிப்பது ஏறக்குறைய முடிவாகி விட்டதாகவே கூறப்படுகிறது. படத்தின் கதை மட்டுமல்ல, அஜித் - மஞ்சு வாரியர் காம்போவும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X