அந்நியனுக்கு மெயில் அனுப்பிய அஜித் ரசிகர்கள்.. போனி கபூருக்கு கருட புராண தண்டனை கொடுக்கணுமாம்!

சென்னை: வலிமை படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து, காத்திருந்த அஜித் ரசிகர்கள், மிகவும் நொந்துப் போய் தற்போது, அந்நியனுக்கே மெயில் அனுப்பி உள்ளனர்.

Recommended Video

Cobra First Look Poster | Chiyaan Vikram | Ajay Gnanamuthu | Ajith Valimai

போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை.

இதைத் தவிர படம் குறித்த வேறு எந்த அப்டேட்டும், ரசிகர்களுக்கு இதுநாள் வரை கிடைக்கவில்லை.

செம கடுப்பில்

செம கடுப்பில்

இதனால், அஜித் ரசிகர்கள், வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் மீது செம கடுப்பில் இருக்கின்றனர். மற்ற நடிகர்கள் நடிக்கும் படத் தயாரிப்பு, நிறுவனங்கள், ரசிகர்களுக்கு அவ்வப்போது, சமூக வலைதளத்தில் அப்டேட்களாக கொடுத்து, உற்சாகப் படுத்தி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் இயல்பாகவே வேதனை படத்தானே செய்வார்கள்.

டிரெண்டான விபத்து

டிரெண்டான விபத்து

வலிமை படம் குறித்து, எந்தவொரு அப்டேட்டும் கிடைக்காத நிலையில், நடிகர் அஜித்துக்கு படப்பிடிப்பில் காயம் என்று பரவிய தகவலை, தல ரசிகர்கள், டிரெண்ட் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அதற்கு அடுத்தாவது வலிமை குறித்த அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு இன்னமும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

உற்சாகம்

உற்சாகம்

அப்டேட் கிடைக்காமல், ஏங்கி போயிருந்த ரசிகர்களுக்கு, லீலா பேலஸில் நடைபெற்ற திருமணத்தில், நடிகர் அஜித் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது, மிகப்பெரிய சந்தோஷத்தையும், வலிமை லுக் தெரிய வந்த நிலையில், உற்சாகமும் பொங்கியது.

ஆனாலும்

ஆனாலும்

என்ன தான் அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் டிரெண்டானாலும், அதிகாரப்பூர்வமாக வலிமை படக்குழுவிடம் இருந்து ஒரு ஃபர்ஸ்ட் லுக் கூட வர மாட்டேங்குதே என்ற ஏக்கம் தல ரசிகர்கள் மத்தியில் தலை விரித்தாடுகிறது. விஜய்யின் மாஸ்டர், விக்ரமின் கோப்ரா, சூர்யாவின் சூரரைப் போற்று, ரஜினியின் அண்ணாத்த பட அப்டேட்கள் வர வர அவர்கள் மேலும், கடுப்பாகி போகின்றனர்.

அந்நியனுக்கு மெயில்

இந்நிலையில், ஒரு தல ரசிகர் கடுப்பின் உச்சத்திற்கே சென்று, போனி கபூர், வயது 64, குற்றம்: வலிமை அப்டேட் தராமல் வெறுப்பேற்றுதல் என அந்நியனுக்கு மெயில் போட, அவரும், கருட புராணத்தில் உள்ள அத்தனை தண்டனைகளும் அவருக்கு வழங்கப்படும் என பதில் அளித்தது போன்ற மீம் சமூக வலைதளத்தில் வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது.

இது எப்படி?

மேலும், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படி இருந்தால், எப்படி இருக்கும் என ஒரிஜினலுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு ஒரு ஃபேன் மேட் போஸ்டரை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். கோட் சூட்டில், கையில் துப்பாக்கியுடன் சமீபத்தில், வெளியான அஜித்தின் லுக்கில் ரியலாவே அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டுகிறது.

சீக்கிரம் கொடுங்கப்பா

சீக்கிரம் கொடுங்கப்பா

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து, வலிமை படத்தை தயாரித்து வரும் ஐயா போனி கபூரே, சீக்கிரம், கருணை காட்டி, ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையோ, ஹீரோயின் யார்? வில்லன் யார்? என்று எதையாவது ஒரு அப்டேட்டை கொடுங்கப்பா என தினமும் தல ரசிகர்கள் வைக்கும் கோரிக்கைக்கு விரைவிலேயே வெயிட்டான பலன் கிடைக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X