»   »  நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால்... ஜே.கே.ரித்தீஷ்க்கு நன்றி சொன்னது ஏன்?

நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால்... ஜே.கே.ரித்தீஷ்க்கு நன்றி சொன்னது ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், என் நண்பன் ஜே.கே.ரித்திஷ் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும். அவனுக்கு நன்றி என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாண்டவர் அணி வெற்றி பெற்றதில் மறைமுறைமாக அதிமுகவைச் சேர்ந்த ரித்தீஷ் உதவியுள்ளது சரத்குமார் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெறுவதற்கு மாபெரும் சக்தியாக விளங்கிய அதிமுகாவின் ஆதரவாளர்கள் நடிகர் ஜே.கே.ரித்தீஷ் நடிகர் விஜய்கார்த்திக் ஆகியோர்களை விஷால் அணியில் இருந்து பிரித்தால் குறுக்கு வழியில் வெற்றி பெற்று விடலாம் என்றும் நடிகர் சங்க உறுப்பினர்களை மிரட்டி தேர்தலில் கலவரம் ஏற்படுத்தி விடலாம் என்றும் ஒரு கணக்கு போட்டார் சரத்குமார். இந்த தேர்தலில் தாம் தோல்வியுற்றால் தன் அரசியல் வாழ்க்கை பறிபோய்விடும் என்ற காரணத்தினாலும் தோல்வி பயத்தாலும், சரத்குமார் தன் முழு சக்தியையும் பயன்படுத்தி முதல்வரின் உதவியை நாடியிருக்கிறார்.

அதே நேரத்தில் அதிமுக கட்சியில் இருக்கும் எந்த ஒரு நடிகரும் இரு அணிக்கும் ஆதரவாக செயல்படகூடாது நியூட்ரலாக இருக்க வேண்டும் என்று நால்வர் அணியின் மூலமாக விஷால் அணியை சேர்ந்த நடிகர்கள் ஜே.கே. ரித்தீஷ் விஜய்கார்திக் மனோபாலா அஜய்ரத்னம், சரவணன் ஆகியோரும் சரத்குமார் அணியை சேர்ந்த பாத்திமாபாபு, குயிலி, குண்டுகல்யாணம், தியாகு நாடகநடிகர் மற்றும் சேலம் மேயர் சவுண்டப்பன் ஆகியோரும் தேர்தல் வேலை செய்ய மற்றும் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டது. ஆனாலும் சேலம் மேயர் சவுண்டப்பன் சரத்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பரபரப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது. பாண்டவர் அணியைச் சேர்ந்த நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு நடிகர் சங்க உறுப்பினர்களை சந்தித்து வாக்கு கேட்ட போதும் சரி, தேர்தல் தினமாக நேற்றும் சரி பரபரப்பாகவே இருந்தார் விஷால். வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது வார்த்தையே வரவில்லை. தொண்டையில் பேச்சே வரலை... வெறும் காத்துதான் வருது என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார் விஷால்.

நல்ல செய்தி கிடைச்சுருக்கு

நல்ல செய்தி கிடைச்சுருக்கு

நள்ளிரவு 12 மணிக்கு நல்ல செய்தி கிடைச்சுருக்கு. இந்த வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி சொல்றேன். முக்கியமாக காவல்துறை எங்களுக்கு ரொம்ப உதவி செய்தார்கள்.

மீடியாவுக்கு நன்றி

மீடியாவுக்கு நன்றி

எங்க பிரச்சினையை மக்கள் கிட்ட கொண்டுபோய் சேர்த்தது மீடியாதான். இது ஸ்டார் நைட் போல இருந்தது. பழைய நடிகர்,நடிகைகள் எல்லாம் வீல் சேர்ல வந்த ஓட்டுக்களை பதிவு செய்தாங்க. ரொம்ப சந்தோசம்.

நாசர் கடவுள்

நாசர் கடவுள்

இந்த தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம் கடவுள் மாதிரி இருந்து எங்களை வழி நடத்தினார். அவருக்கும் நன்றி என்று சொன்னார் விஷால். அடுத்ததாக அவர் நன்றி கூறியதுதான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நண்பனுக்கு நன்றி

நண்பனுக்கு நன்றி

எங்களுக்கு உதவிய நண்பன் ஜே.கே.ரித்தீஷ் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும். அவனுக்கு நன்றி. எங்களின் வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து நடிகர்களுக்கும் நன்றி என்று கூறியதன் மூலம் விஷால் அணியின் வெற்றிக்கு அதிமுகவைச் சேர்ந்த ரித்தீஷ் உதவியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அம்மாவுக்கு நன்றி

அம்மாவுக்கு நன்றி

இதேபோல செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் தமிழக முதல்வர் அம்மாவுக்கு நன்றி என்று கூறினார்கள். விஷால் அணிக்கு அதிமுகவின் மறைமுக ஆதரவு கிடைத்துள்ளது சரத்குமார் அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்னவோ உண்மைதான்.

English summary
South Indian Artistes’ Association (SIAA), young hero Vishal Reddy led ‘Pandavar Ani’ (Pandava Team) virtually swept the polls, capturing all five top posts even as the bitter sparring between the rivals seemed to give way to camaraderie. Vishal Thanked to Actor J.K.Rithish.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil