»   »  இந்த பொங்கல் நடிகர் விஜய்க்கு சோகப் பொங்கல்

இந்த பொங்கல் நடிகர் விஜய்க்கு சோகப் பொங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: இந்த பொங்கல் விஜய்க்கு சோகப் பொங்கலாக அமைந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்தவர் இமயம் ரவி(48). ஓவியர். அவர் காஞ்சிபுரத்தை அடுத்து உள்ள ஓரிக்கை பாலாற்றில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தது இமயம் ரவி என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

This Pongal is really a sad one for Vijay

ரவி கூடுவாஞ்சேரியில் உள்ள விஸ்வநாதபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ரவி இறந்த செய்தி அறிந்த விஜய் பொங்கல் பண்டிகை நாளன்று காஞ்சிபுரம் சென்று ரவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

This Pongal is really a sad one for Vijay

விஜய்யை பார்த்த ரவியின் குடும்பத்தார் அவரின் கையை பிடித்துக் கொண்டு கதறி அழுதனர். இதற்கிடையே ரவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
This Pongal is a sad one for actor Vijay as his Vijay Makkal Iyakkam Kancheepuram district head passed away. Vijay paid his last respects on pongal day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil