தேர்தலில் போட்டி...திமுக.,வில் விருப்ப மனு அளித்த பிரபல நடிகர்
சென்னை : தேர்தல் வந்து விட்டாலே முக்கிய கட்சிகளுக்காக பிரபல நடிகர், நடிகைகள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் இந்த முறை தானே தேர்தலில் போட்டியிட பிரபல நடிகர் ஒருவர் திமுக.,வில் விருப்ப மனு அளித்துள்ளார்.

அந்த நடிகர் வேறு யாருமில்லை, போஸ் வெங்கட் தான். மெட்டிஒலி சீரியல் மூலம் நடிக்க வந்தவர் போஸ் வெங்கட். பிறகு ஈர நிலம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். சிவாஜி, கோ, சரோஜா, கவன், தீபாவளி போன்ற பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் கன்னி மாடம் படத்தின் மூலம் டைரக்டராகவும் அவதாரம் எடுத்தார். இந்நிலையில் தற்போது வரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் அரந்தாங்கி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.
போஸ் வெங்கட்டின் போட்டோவுடனான விருப்ப மனு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. போஸ் வெங்கட்டின் மனுவை ஏற்று, அவர் தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கினால், அடுத்தகட்டமாக அரசியலிலும் அவர் தடம் பதிக்க வாய்ப்பு ஏற்படும்.


Click it and Unblock the Notifications











