Don't Miss!
- News
அந்த 7 மணி நேரம்.. மேஜையில் பைல்களை எடுத்து வைத்த எடப்பாடி.. யார் அந்த ஒருவர்? பறந்து வந்த உத்தரவு
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தலைவர் 169 க்காக ரஜினி எடுத்த அதிரடி முடிவு...இன்னும் நெல்சன் மீது நம்பிக்கை வரலியோ?
சென்னை : தலைவர் 169 படத்திற்காக ரஜினி புது முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் புதிதாக இணைந்துள்ள பிரபலத்தால் பல விதமான தகவல்கள் மீடியாக்களில் பரவி வருகிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கி செம ஹிட் கொடுத்த டைரக்டர் நெல்சன் திலீப்குமார் மீது நம்பிக்கை அதிகரித்தது. ஆனால் பீஸ்ட் படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்களால் நெல்சன் திலீப்குமார் படமா என ரசிகர்கள் பயப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. பீஸ்ட் படம் ரிலீசான போதே, அடுத்து தலைவர் 169 என்ன ஆக போகிறதோ என்று பலர் கூறினர்.
பீஸ்ட்,
வலிமை
சாதனையை
ஓரங்கட்டிய
விக்ரம்...இரண்டே
நாளில்
100
கோடி
கிளப்

வதந்திகளை நிறுத்திய ரஜினி
தலைவர் 169 கைவிடப்பட்டது, படத்தில் இருந்து நெல்சன் நீக்கப்பட்டார் என்று கூட சில வதந்திகள் பரவின. அதற்கு பிறகு ரஜினி தலையிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் கவர் போட்டோவாக தலைவர் 169 படத்தின் ஸ்டில்லை வைத்ததற்கு பிறகு தான் வதந்திகள் ஓய்ந்தன. தலைவர் 169 ஷுட்டிங் பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தலைவர் 169 ரிலீஸ் எப்போ
ரஜினி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு ஆகஸ்ட் மாதத்தில் தலைவர் 169 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. படத்தை 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்றொரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினியின் அதிரடி முடிவு
தலைவர் 169 படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், லேட்டஸ்ட் தகவலாக டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரும் இந்த படத்தில் இணைந்துள்ளாராம். ஆனால் தலைவர் 169 ல் அவர் நடிக்கவில்லையாம். மாறாக டைரக்ஷன் மற்றும் திரைக்கதையில் வேண்டிய மாற்றங்களை செய்ய படக்குழுவிற்கு உதவுவதற்காக கே.எஸ்.ரவிக்குமாரும் தலைவர் 169 டீமில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நெல்சன் மீது நம்பிக்கை வரலியோ
ஜுலை மாத இறுதியில் தலைவர் 169 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக பெரிய ஸ்டார்களின் படங்களில் அடுத்து யார் இணைய போகிறார், அவர் என்ன ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் தான் வரும். ஆனால் தலைவர் 169 ல் டைரக்ஷனை சரி பார்க்கவும், உதவவும் முன்னணி டைரக்டர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமாரை சேர்த்திருப்பது, ரஜினிக்கு நெல்சன் மீது முழுவதும் நம்பிக்கை வரவில்லை என்பதை காட்டுவதாக உள்ளதாக தகவல் பரவ துவங்கி உள்ளன.