Don't Miss!
- News
இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! குடியரசுத் தலைவர் முர்மு உரை நிகழ்த்துகிறார்!
- Automobiles
இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகும் கியா ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்... இதற்கான காரணம் என்ன?
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
புஷ்பா 2 ல் மட்டுமில்ல, ஷாருக்கானின் ஜவானிலும் இவர் தான் வில்லன்...பான் இந்தியா வில்லனா?
சென்னை : டைரக்டர் அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் தயாராகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட உள்ள இந்த படத்தை கெளரிகான் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
நயன்தாரா முதல் முறையாக பாலிவுட்டில் தடம் பதிக்கும் இந்த படத்தில் பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, விசாரணை அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
மாரி
செல்வராஜ்
படத்தில்
'மாமன்னன்’
உதயநிதி
ஸ்டாலின்
இல்லையாம்..
அப்போ
கதையின்
நாயகன்
அவர்
தானா?

வில்லன் யார்
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீசாக உள்ள ஜவான் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். படம் பற்றி பல தகவல்கள வெளியானாலும் இதுவரை வில்லன் யார் என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதுவரை ஹீரோ ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் சீன்கள் மட்டுமே படமாக்கப்பட்டு வருகிறதாம். ஆனால் படத்தின் வில்லன் யார் என்பது பற்றி இப்போது தான் முடிவு செய்து, ஃபைனல் செய்திருக்கிறார்களாம்.

முதல் சாய்ஸ் இவர் தான்
ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க முதலில் தெலுங்கு நடிகர் ராணாவிடம் தான் கேட்கப்பட்டதாம். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.இதனால் யாரை வில்லனாக நடிக்க வைக்கலாம் என படக்குழு இந்தியா முழுவதும் வலைவீசி தேடியதாம். அப்போது தான் டைரக்டர் அட்லி, விஜய் சேதுபதியிடம் வில்லனாக நடிக்க பேசினாராம்.

ஓகே சொன்ன விஜய் சேதுபதி
படத்தின் கதையை கேட்டதும் விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்து விட்டதாம். உடனடியாக ஓகே சொன்னதுடன், தேதிகளையும் ஷாருக்கான் படத்திற்காக ஒதுக்கிக் கொடுத்து விட்டாராம். விரைவில் துவங்க உள்ள ஜவான் அடுத்த கட்ட ஷுட்டிங்கில் விஜய் சேதுபதியும் இணைய போகிறாராம். ஜவான் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாம்.

ஒரே படத்தில் விஜேஎஸ் - ஷாருக்
மெல்பேர்னில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் போது, விஜய் சேதுபதி ஒரு அற்புதமான நடிகர் என ஷாருக்கான் பாராட்டி பேசி இருந்தார். ஆனால் இன்று அவர்கள் இருவரும் ஒரே படத்தின் இணைந்து நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. ஹீரோ, கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்திற்கு பிறகு வில்லன் ரோல்களில் அதிகம் நடிக்க துவங்கி விட்டார்.
Recommended Video

பான் இந்தியா வில்லன்
தமிழில் விக்ரம் படத்தில் வில்லன் ரோலில் நடித்த விஜய் சேதுபதியிடம் தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் வில்லன் ரோலில் நடிக்க பேசிப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாலிவுட்டிலும் வில்லனாக அறிமுகமாக விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இதுவரை பான் இந்திய நடிகராக அனைத்து மொழிகளிலும் தயாரிப்பாளர்கள், டைரக்டர்களின் முதல் சாய்சாக இருக்கும் விஜய் சேதுபதி தற்போது வில்லன் ரோலுக்கும் முதல் சாய்சாக மாறி உள்ளார்.