நான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலா...பதறிப் போன பிரபல தமிழ் நடிகை
மும்பை : இந்திய அளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ். டிவி ரியாலிட்டி ஷோவான இந்த நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக இந்தியில் துவங்கப்பட்டது. பிறகு கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மாநில மொழிகளிலும் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் பிக்பாஸ் மலையாளம் சீசன் 3 செட்டில் பலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் சென்னையில் செட் அமைக்கப்பட்டு, நடத்தப்பட்டு வந்த பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில் இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தமிழ் நடிகையான பூமிகா, போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக சமீப காலமாக செய்தி பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 15 விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் இது பற்றி பூமிகாவே இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், அது உண்மையில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க என்னிடம் பேசப்படவில்லை. அப்படி கேட்டாலும் நான் ஒப்பு் கொள்ள மாட்டேன். சீசன் 1, 2,3 மற்றும் அதற்கு பிறகும் பலமுறை என்னிடம் கேட்டார்கள். ஆனால் அனைத்தையும் நான் மறுத்து விட்டேன்.
இந்த முறை என்னிடம் கேட்கவில்லை. இப்போதும் அதை ஏற்க நான் தயாராக இல்லை. நான் பப்ளிக் பெர்சனாலிட்டி தான். ஆனால் ஒரு தனி நபர். 24 மணி நேரமும் கேமிரா முன் இருக்க முடியாது. என்னை எப்போதும் கேமிராக்கள் கண்காணிப்பதை நான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











