கமலை அடுத்து இயக்க போவது இவர் தான்... அப்போ படம் தீயாய் இருக்குமே

சென்னை : கமலின் அடுத்த படத்தை இயக்க போகும் டைரக்டர் யார் என்ற கேள்வி பல நாட்களாக கோலிவுட்டில் உலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கமலின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாக துவங்கி விட்டன.

நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வரும் கமல் படம் என்பதால் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

இந்தியன் 2 வருமா

இந்தியன் 2 வருமா

விக்ரம் படத்தின் வேலைகள் முடிந்த பிறகு கமல், பாதியில் நிற்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டைரக்டர் ஷங்கர், தெலுங்கில் ராம்சரணை வைத்து இயக்கும் ஆர்சி 15 படத்தின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இந்தியன் 2 படத்தை எப்போது துவங்குவார்கள் என்றே தெரியவில்லை.

கமலின் அடுத்த படம்

கமலின் அடுத்த படம்

இதனால் கமல், கொம்பன், விருமன் படங்களை இயக்கிய டைரக்டர் முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இதுவும் கிராமத்து கதை என்றார்கள். பிறகு மலையாள டைரக்டர் மகேஷ் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இது தேவர்மகன் 2 படமாக இருக்கலாம் என்றெல்லாம் கூறப்பட்டது. தேவர்மகன் 2 படத்தில் கமலுடன் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இவர் தான் இயக்க போகிறாரா

இவர் தான் இயக்க போகிறாரா

ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, கமலின் அடுத்த படத்தை டைரக்டர் பா.ரஞ்சித் தான் இயக்க போகிறாராம். டைரக்டர் முத்தையா இயக்கும் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். பா.ரஞ்சித் - கமல் இணையும் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவிடம் பேசப்பட்டு வருகிறதாம். விரைவில் இந்த படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளதாம்.

கதை தீயாய் இருக்குமே

கதை தீயாய் இருக்குமே

விரைவில் பா.ரஞ்சித்-கமல் படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம். பா.ரஞ்சித் படத்தை முடித்த பிறகு முத்தையா இயக்கும் படத்திலும், பிறகு மகேஷ் படத்திலும் நடிக்க உள்ளாராம். பொதுவாக பா.ரஞ்சித் படங்களில் கதை தீயாய் இருக்கும். அதிலும் கமல் படம் என்பதால் வித்தியாசமான, செம ஸ்டிராங்கான கதையை உருவாக்க உள்ளாராம் ரஞ்சித். இதனால் அடுத்தடுத்த அப்டேட்கள் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X