என்னப்பா லிஸ்ட் பெரிசா போகுது...மாஸ் ஹிட்டுக்கு பிளான் போடும் பாலா–சூர்யா
சென்னை : டைரக்டர் பாலா- சூர்யா இணையும் படமே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதில் அந்த படத்தில் இணையும் நடிகர், நடிகைகளின் லிஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தொடர்ந்து கூட்டிக் கொண்டே செல்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யா படம் தியேட்டரில் ரிலீசாகி உள்ளது. ஓடிடி.,யில் இரண்டு மாஸான படங்களை கொடுத்து, சர்வதேச விருதுகளை அள்ளிய சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படமும் செம ஹிட்டாகி உள்ளது. குடும்ப ஆடியன்ஸ் கொண்டாடும் படமாக உள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்களிடமும் பாராட்டை பெற்றுள்ளது இந்த படம். இதனால் சூர்யாவின் அடுத்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

மீண்டும் பாலா-சூர்யா கூட்டணி
அடுத்ததாக சூர்யா, டைரக்டர் பாலா நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்க போகும் படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்க உள்ளது. இதில் 16 வருடங்களுக்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக அவரது காதல் மனைவி ஜோதிகா நடிக்க போகிறாராம். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க போகிறார்.

அடுத்த மாஸ் ஹிட் கன்ஃபார்ம்
இது தான் செம தகவல் என்று பார்த்தால், இதை மிஞ்சும் அளவிற்கு அடுத்த அப்டேட்டாக படத்தில் இரண்டு ஹீரோ, மூன்று ஹீரோயின்கள் என்ற தகவல் வெளியானது. இந்த படத்தில் சூர்யா, ஜோதிகாவுடன் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அதர்வா ஆகியோர் நடிக்க உள்ளனர் என்றார்கள். இவர்கள் எல்லாம் ஏற்கனவே நடிப்பில் பின்னுவார்கள். அதிலும் பாலா படம் என்றால் கேட்கவே வேண்டாம். வேற லெவலில் தான் படம் இருக்கும் என ரசிகர்கள் கூற துவங்கினர்.

அட இவரும் இருக்காரா
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, சூர்யா-பாலா படத்தில் மிக முக்கியமான ரோலில் கீர்த்தி ஷெட்டி நடிக்க போகிறாராம். இவர்கள் இதற்கு முன் தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த உபன்னா, நானி நடித்த ஷ்யாம் சிங்கா ராய், நாக சைதன்யா நடித்த பங்காரு ராஜு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களும் தெலுங்கில் செம ஹிட்டான படங்கள். தமிழில் பாலா படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க போகிறாராம்.

எப்போ ஷுட்டிங் துவக்கம்
பாலா-சூர்யா இணையும் படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாம். முதல் கட்ட ஷுட்டிங் ராமேஸ்வரத்தில் நடத்தப்பட உள்ளதாம். மூன்று முதல் நான்கு மாதங்கள் ஷுட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. சூர்யா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருப்பதால் பாலா படத்தை விரைவாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறதாம்.

சூர்யாவின் அடுத்த மாஸ்டர் பிளான்
பாலா படத்தை முடித்த கையோடு உடனடியாக வெற்றிமாறனின் வாடிவாசல் பட ஷுட்டிங்கை சூர்யா துவக்க போகிறாராம். வாடிவாசல் படத்திற்கான டெஸ்ட் ஷுட் விரைவில் நடத்தப்பட உள்ளதாம். படத்தின் முழு ஷுட்டிங் ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதை முடித்த பிறகு சூர்யா நடிக்க போவது சிறுத்தை சிவா படமா அல்லது பாண்டிராஜ் இயக்கும் மற்றொரு படமா என்பது பின்னர் முடிவு செய்யப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











