பாலா – சூர்யா இணையும் படத்தின் ஹீரோயின் இவரா ?
சென்னை : டைரக்டர் பாலா மீண்டும் படம் இயக்க போவதாகவும், இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்க உள்ளதாகவும் சமீபத்தில் கூறப்பட்டது. இந்த படத்தின் ஹீரோவாக அதர்வா நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

முதலில் இந்த படத்தில் சூர்யா, சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பிறகு அதர்வாவிற்கு பதில் சூர்யாவையே ஹீரோவாக நடிக்க வைக்க பாலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இது உறுதியாகவில்லையாம். அதனால் தற்போது வரை அதர்வா தான் ஹீரோ என கூறப்படுகிறது.

ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க போவதாகவும் சமீபத்தில் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் இல்லையாம். அவருக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க போகிறாராம்.
பெயரிடப்படாத இந்த படத்தின் ஷுட்டிங் 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட உள்ளதாம். இதற்காக இரண்டு நாட்களுக்கு முன் ஃபோட்டோஷுட் நடத்தப்பட்டுள்ளதாம். பிதாமகன், 180, பசங்க 2, சக்ரா போன்ற படங்களில் பணியாற்றிய பாலசுப்ரமணியம் தான் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய உள்ளாராம்.
ஆரம்ப காலத்தில் பாலா இயக்கிய படங்கள் தான் இன்று சூர்யாவை மிகப் பெரிய நடிகராக ஆக்கி உள்ளது. தனக்கு தனி இமேஜை உருவாக்கிய டைரக்டர் என்பதால் பாலா படத்தை தானே தயாரிக்க ஒப்புக் கொண்டாராம் சூர்யா. 2001 ம் ஆண்டு நந்தா படத்தில் தான் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றினர்.
அதற்கு பிறகு 2003 ல் இருவரும் இணைந்து பிதாமகன் படத்தை உருவாக்கினர். நந்தா, பிதாமகன் ஆகிய இரு படங்களுமே கமர்ஷியல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியை பெற்றன. சூர்யாவின் மாறுபட்ட நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து விஷால் - ஆர்யாவை வைத்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்தார்.
பாலா கடைசியாக 2018 ல் நாச்சியார் என்ற த்ரில்லர் படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஜோதிகா லீட் ரோலில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்த இந்த படம் பல பிரச்சனைகளால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பிறகு 2019 ல் பாலாவின் அசிஸ்டென்ட் கிரீஷயா, இந்த படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் எடுத்து, ரிலீஸ் செய்தார். இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் துருவ்வின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது.


Click it and Unblock the Notifications











