இந்த சீசன் ஃபைனல்ஸ்க்கு வந்த எல்லோருமே விஜய் டிவி புராடக்ட் தானா? கடுப்பான ரசிகர்கள்!

சென்னை: விஜய் டிவி பிரபலம் அல்லாத பல பேரை இந்த சீசனுக்கு அழைத்து வந்துள்ளதாக மாயையை உருவாக்கி ரசிகர்களை ஏமாற்றி விட்டது விஜய் டிவி என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தாமரை செல்வி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தகவல் கசிந்து விட்ட நிலையில், ஃபைனல்ஸ்க்கு போகும் 5 பேரும் விஜய் டிவி புராடக்ட் தான் என வச்சு விளாசி வருகின்றனர்.

கடந்த சீசனில் கடலை தின்றவர், அன்பு ஸ்ட்ராட்டஜி எல்லாம் பலிக்காத நிலையில் இந்த சீசனில் அதையே ஆயுதமாக்கி ஷோவை நடத்தி வருகின்றனர் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

தாமரை எவிக்டட்

தாமரை எவிக்டட்

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் தாமரை வெளியேறி விட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்து ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது. விஜய் டிவி புராடக்ட் இல்லாத நபர்களாக இருந்த சிபி மற்றும் தாமரை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதே ஒரு திட்டமிட்ட சூழ்ச்சி என்றும் அவரது ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

விஜய் டிவி புராடக்ட்ஸ்

விஜய் டிவி புராடக்ட்ஸ்

மேலும், இறுதி வாரத்திற்கு தேர்வாகி உள்ள போட்டியாளர்கள் அனைவருமே விஜய் டிவியின் புராடக்ட்ஸ் தான் என்றும் நெட்டிசன்கள் ஏகப்பட்ட புகார்களை முன் வைத்து வருகின்றனர். அமீர், நிரூப், ராஜு, பிரியங்கா மற்றும் பாவனி என அனைவருமே விஜய் டிவி உடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் என்றே கூறுகின்றனர்.

முதல் ஃபைனலிஸ்ட்

முதல் ஃபைனலிஸ்ட்

விஜய் டிவியின் கிங்ஸ் ஆஃப் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் கொரியோகிராஃபராக பிரபலமானவர் தான் அமீர். மேலும், விஜய் டிவியின் பல பிரபலமான நிகழ்ச்சிகளுக்கும் இவர் கொரியோகிராஃபராக இருந்து ஒட்டுமொத்த விஜய் டிவி பிரபலங்களின் ஃபேவரைட்டானவர் தான். இந்த சீசனில் முதல் ஃபைனலிஸ்ட்டாக டிக்கெட் டு ஃபினாலே மூலம் தேர்வாகி உள்ளார்.

யாஷிகா சிபாரிசு

யாஷிகா சிபாரிசு

கடந்த சீசனில் யாஷிகா ஆனந்தின் நண்பர் பாலாஜி முருகதாஸ் ஏற்கனவே விஜய் டிவியின் ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற அவர் போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனதை போல இந்த சீசனில் யாஷிகா ஆனந்தின் எக்ஸ் பாய் ஃபிரண்ட் நிரூப் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். யாஷிகா ஆனந்த் மற்றும் விஜய் டிவியின் முழு சப்போர்ட்டும் நிரூப்புக்கு இருக்கும் நிலையிலேயே இரண்டாவது போட்டியாளராக அவர் தேர்வானார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சீரியல் நடிகர்

சீரியல் நடிகர்

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்க ஆரம்பித்த ராஜு ஜெயமோகன் கல்லூரி சாலை, ஆண்டாள் அழகர் உள்ளிட்ட ஏகப்பட்ட விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்தவர். கவினின் நட்புன்னா என்னனு தெரியுமா? படத்தில் நண்பனாக நடித்த ராஜு இந்த சீசனில் 3வது ஃபைனலிஸ்ட்டாக மாறி உள்ளார். மக்கள் சப்போர்ட் அதிகம் உள்ள ராஜு டைட்டிலை வின் பண்ணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல தொகுப்பாளினி

பிரபல தொகுப்பாளினி

4வது ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகி உள்ள பிரியங்காவை பற்றி சொல்லவே தேவையில்லை. விஜய் டிவியின் ஃபேவரைட் தொகுப்பாளினி என்பது உலகத்திற்கே தெரியும். இந்த சீசனில் ராஜுவுக்கு அடுத்தபடியாக மக்கள் சப்போர்ட் பிரியங்காவுக்கே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் ராஜுவுக்கு சரியான போட்டியாக பிரியங்கா இருந்து வருகிறார்.

சீரியல் நடிகை

சீரியல் நடிகை

அதே போல கடைசி ஃபைனலிஸ்ட்டான பாவனியும் விஜய் டிவியில் வெளிவந்த சீரியல்களில் நடித்து வந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த பாவனி விஜய் டிவியில் வெளியான ரெட்டை வால் குருவி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிரஜன் உடன் இவர் நடித்த சின்னதம்பி சீரியல் சூப்பர் ஹிட் அடித்தது. அக்‌ஷரா போட்டியாளராக பங்கேற்ற வில்லா டு வில்லேஜ் ரியாலிட்டி ஷோவில் கெஸ்ட்டாகவும் பாவனி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்க்ரிப்ட் இல்லை

ஸ்க்ரிப்ட் இல்லை

ஆனால், விஜய் டிவியை பொறுத்தவரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் எதுவுமே ஸ்க்ரிப்ட் இல்லை. இந்த முறை ஃபைனலிஸ்ட்டாக உள்ளே சென்றுள்ள 5 பேரும் விஜய் டிவி புராடக்ட் ஆக இருந்தாலும் அதிலும் எந்தவொரு தப்பும் இல்லை. தங்கள் செல்லப்பிள்ளைகளை சினிமா பிரபலங்களாக மாற்றும் விஷயமும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று தானே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X