அனல் பறக்கும் எதற்கும் துணிந்தவன்...சூர்யாவுடன் இணைந்து நடித்த டாப் ஹீரோ, டைரக்டர்

சென்னை : டைரக்டர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து, ஓடிடி.,யில் வெளியிடப்பட்ட ஜெய்பீம் படம் பல சர்ச்சைகளையும், எதிர்ப்புக்களையும் சந்தித்து வருகிறது. அதே சமயம் பலரின் பாராட்டுக்களையும் இந்த படம் பெற்றுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் விஜய் ராய், பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டப்பிங் பேசும் சூர்யா

டப்பிங் பேசும் சூர்யா

டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தின் டப்பிங் வேலைகளை துவக்கி, சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறார் சூர்யா.

மூன்றாவது முறையாக கூட்டணி

மூன்றாவது முறையாக கூட்டணி

பசங்க 2, கடைக்குட்டி சிங்கம் படங்களைத் தொடர்ந்து சூர்யா- பாண்டிராஜ் கூட்டணி அமைத்துள்ள படம் எதற்கும் துணிந்தவன்.பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார் சூர்யா. இதைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து பாண்டியராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தான் தயாரித்திருந்தது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமீபத்தில் சிறப்பு க்ளான்ஸ் உடன் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், 2022 ம் ஆண்டு பிப்ரவரி 4 ம் தேதி எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடல் எழுதிய பிரபலங்கள்

பாடல் எழுதிய பிரபலங்கள்

எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் டைரக்டர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பாடல்கள் எழுதி இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயனும், அஜித் நடித்துள்ள வலிமை படத்தில் விக்னேஷ் சிவனும் ஏற்கனவே பாடல்கள் எழுதி உள்ளனர். வலிமை படத்தில் விக்னேஷ் சிவன் எழுதி நாங்க வேற மாரி பாடல், ஃபஸ்ட்சிங்கிளாக வெளியிடப்பட்டு, ரசிகர்களால் வேற லெவல் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இவங்க நடிச்சிருக்காங்களா

இவங்க நடிச்சிருக்காங்களா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் விக்னேஷ் சிவன் பாடல் எழுதி உள்ளதுடன், சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்களாம். இவர்கள் நடித்துள்ள ஸ்பெஷல் சாங்கை படக்குழு விரைவில் வெளியிட உள்ளதாம். இந்த தகவல் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X