மதராஸி வசூலுக்கு மொத்தமாக ஆப்பு.. இந்த வாரம் 10 புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகுதாம்.. ரொம்ப பாவம்!
சென்னை: மதராஸி திரைப்படம் முதல் 3 நாட்களில் அள்ளியது தான் வசூல் என்கிற நிலை உருவாகி விடும் போல தெரிகிறது. திங்கட்கிழமை 4 கோடியாக குறைந்த வசூல், செவ்வாய்க்கிழமையான நேற்று 3 கோடி மட்டுமே வசூல் செய்தது. இந்நிலையில், இந்த வெள்ளிக்கிழமை முதல் மேலும், மதராஸி படத்தின் வசூலை குறைக்க தமிழில் மட்டும் 10 படங்கள் படையெடுத்து வருகின்றன.
ஏற்கனவே கல்யாணி பிரியதர்ஷனின் லோகா திரைப்படம் தான் கடந்த வாரமே தமிழில் நன்றாக வசூலில் பர்ஃபார்மன்ஸ் செய்து வருகிறது. இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ், அதர்வா முரளி உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களும் வெளியாக உள்ள நிலையில், 2வது வார விடுமுறை நாட்களில் கூட மதராஸி பெரிதாக வசூல் வேட்டை நடத்துவது சிரமம் தான் என்கின்றனர்.

200 படங்கள் வெளியானால் 190 படங்கள் தோல்வியை தழுவுவதாக வைரமுத்து சமீபத்திய பிரஸ்மீட் ஒன்றில் பேசியிருந்தார். இப்படி வாரத்துக்கு 10 படங்கள் வெளியானால் எந்த தயாரிப்பாளருக்கும் லாபம் கிடைக்காது என்றே திரைத்துறையில் உள்ள பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வாரம் 10 படங்கள் ரிலீஸ்: ஜி.வி. பிரகாஷ் குமார், ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவான பிளாக்மெயில் படம் ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், இந்த வாரம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது. அதர்வாவின் தணல், சின்னத்திரை நடிகர் குமரன் நடித்துள்ள குமாரசம்பவம், அர்ஜுன் தாஸ் நடித்துள்ள பாம் உள்ளிட்ட படங்களுடன் மேலும், காயல், யோலோ, மதுரை 16, அந்த 7 நாட்கள், உருட்டு உருட்டு மற்றும் தாவூத் உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களும் இந்த வாரம் திரையரங்குகளை ஆக்கிரமிக்க ரெடியாகி விட்டன.
தேஜா சஜ்ஜாவின் மிராய்: லோகா படத்தைத் தொடர்ந்து டோலிவுட் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜாவின் ஃபேண்டஸி படமான மிராய் படமும் இந்த வாரம் வெளியாகிறது. உலகம் முழுவதும் பிரமாண்டமாக அந்த படமும் வெளியாகவுள்ள நிலையில், இரண்டாவது வாரத்தில் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துக்கான தியேட்டர்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதராஸி வசூல் பாதிக்கும்: இதுவரை உலகளவில் 70 முதல் 80 கோடி வரை மதராஸி திரைப்படம் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்தியாவில் மதராஸி 44.45 கோடி வசூலை 5 நாட்களில் ஈட்டியிருப்பதாக சாக்னிக் வெப்சைட் தகவல் வெளியிட்டுள்ளது. 2வது வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெரிய வசூலை மதராஸி அள்ளினால் தான் 100 கோடி வசூலையாவது நெருங்கும் என்றும் ஆனால், தற்போது 10க்கும் மேற்பட்ட படங்களின் அணிவகுப்பு அதற்கு பெரும் சிக்கலாக மாறிவிடும் என திரை வட்டாரங்கள் கணித்து வருகின்றன.
சம்பளத்தை குறைக்கணும்: நடிகர்கள் சம்பளத்தை குறைத்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ் சினிமாவின் நிலை மாறி வருகிறது என்றும் நடிகர்களை விட சில இயக்குநர்களே அதிக சம்பளம் வாங்கிவிட்டு சுமாரான படங்களை கொடுத்து வரும் நிலையில், படத்தின் வெற்றியை பொறுத்தே ஷேர் முறையில் தான் இனிமேல் சம்பளங்கள் வழங்கப்படும் என்கிற நிலையும் உருவாகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











