சன் டிவி ‘கயல்’ சீரியலை முந்திய விஜய் டிவி தொடர்.. டிஆர்பியில் முன்னிலை.. எந்த தொடர் தெரியுமா?
சென்னை : சன் டிவியின் அடுத்தடுத்த தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிஆர்பியிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் சன் டிவியின் கயல் தொடர் முன்னிலை வகித்து வந்தது.
தற்போது கயல் உள்ளிட்ட தொடர்களை பின்னுக்கு தள்ளியுள்ளது விஜய் டிவியின் முன்னணி தொடர்.

சேனல்களிடம் நிலவும் போட்டி
டிவி சேனல்கள் ஒவ்வொன்றும் தங்களை ரேட்டிங்கில் முன்னிலை படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட சேனல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சிறப்பான நிகழ்ச்சிகளையும் தொடர்களையும் ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றன.

முதலிடத்தில் இருந்த கயல் தொடர்
இதில் சன் டிவி, விஜய் டிவிக்குத்தான் எப்போதுமே போட்டி நிலவும். அந்த வகையில் கடந்த சில வாரங்களாக சன் டிவியின் கயல் தொடர் ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. இந்தத் தொடரில் தனி ஒரு பெண்ணாக பல பிரச்சினைகளையும் கடந்து செல்லும் கயல், ஏராளமான ரசிகர்களை பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

முதலிடத்தை பிடித்த பாக்கியலட்சுமி
அடுத்தடுத்த இடங்களில் சன் டிவி தொடர்களே இருந்து வந்தன. சன் டிவியின் வானத்தை போல, சுந்தரி, ரோஜா, எதிர்நீச்சல் தொடர்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருந்தன. இந்நிலையில் தற்போது இந்தத் தொடர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் முதல் இடத்தை பிடித்துள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் காதல் விவகாரம் இரு தரப்பினருக்கும் தெரியவந்துள்ள நிலையில், தன்னை 25 வருடங்களாக தன்னுடைய கணவன் ஏமாற்றி வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் பரிதவிக்கிறார் பாக்கியலட்சுமி. தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். பரபரப்பான திருப்பங்களுடன் தற்போது தொடர் முன்னேறி வருகிறது.

கூட்டுப்புழு போன்ற வாழ்க்கை
தன்னுடைய குடும்பம் மற்றும் கணவன் மீது மிகுந்த பாசத்துடன், அவர்களை சுற்றியே தன்னுடைய வாழ்க்கையை யோசித்துவந்த பாக்கியலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அடுத்தது பாக்கியலட்சுமி தன்னுடைய வாழ்க்கையை எப்படி கொண்டு போவார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் சன் டிவி தொடர்கள்
ரசிகர்களின் இந்த கேள்விகளே தற்போது சீரியலை முதலிடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை கயல் சீரியல் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் வானத்தைப்போல, சுந்தரி, ரோஜா, கண்ணான கண்ணே உள்ளிட்ட சன் டிவி தொடர்கள் இடம்பெற்றுள்ளன.

8வது இடத்திற்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா
7வது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் உள்ளது. முன்னணி தொடராக இருந்த பாரதி கண்ணம்மா பிடித்துள்ள இடம் 8. 9வது இடத்தில் எதிர்நீச்சல் மற்றும் 10வது இடத்தில் தமிழும் சரஸ்வதியும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன. தீபக் மற்றும் நக்ஷத்ரா நடித்துவரும் இந்தத் தொடரும் சமீப காலங்களில் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மீண்டும் முதலிடத்தை பிடிக்குமா கயல் தொடர்?
அடுத்தடுத்த வாரங்களில் இந்த ரேட்டிங்கில் மாற்றம் ஏற்படலாம். மீண்டும் கயல் தொடர் முதலிடத்திற்கு முன்னேறவும் வாய்ப்புண்டு. ஆனால் பாக்கியலட்சுமி தொடர் தற்போது கொடுத்துவரும் அதே பரபரப்பான எபிசோட்களை தொடர்ந்து கொடுத்தால் தொடர்ந்து தன்னுடைய முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











