பிக்பாஸ் சீசன் 5...இந்த வாரம் வெளியேற போகிறவர்...மூவரில் யார்?

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் விறுவிறுப்பு கூடிக் கொண்டே செல்கிறது. அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது.

துவக்கத்தில் 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். முதல் வாரத்திலேயே மருத்துவ காரணங்களால் நமிதா மாரிமுத்து வெளியேறிய நிலையில், நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் நாமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

 நாமினேட் ஆன 7 பேர்

நாமினேட் ஆன 7 பேர்

இந்நிலையில் இந்த வாரத்தில் ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அபிநய், இமான் அண்ணாச்சி, மதுமிதா, சிபி, பாவ்னி, ராஜு, அக்ஷரா ஆகியோர் நாமினேட் ஆகி உள்ள நிலையில், இவர்களில் யார் காப்பாற்றப்பட போகிறார்கள் என்பதை வார இறுதி எபிசோடின் முதல் நாளான இன்று கமல் அறிவிக்க போகிறார். அதைத் தொடர்ந்து நாளை வெளியேற போகிறவர் யார் என்பதை அறிவிக்க உள்ளார்.

டேஞ்சர் ஜோனில் 3 பேர்

டேஞ்சர் ஜோனில் 3 பேர்

தற்போது வெளியாகி உள்ள அதிகாரப்பூர்வமற்ற தகவலின் படி அபிநய், மதுமிதா அல்லது பாவ்னி இவர்கள் மூன்று பேரும் தான் குறைவான ஓட்டுக்கள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருக்கிறார்களாம். இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என கூறப்படுகிறது. இதில் அபிநய் ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பாவ்னியிடம் ஆளுமை

பாவ்னியிடம் ஆளுமை

இந்த வாரம் வீட்டை ஆளுமை செய்வதற்கான அதிகாரம் பாவ்னிக்கு வழங்கப்பட்டது. இதில் அவர் பேசிய பாயிண்ட்கள், தைரியமாக மற்றவர்களிடம் பேசியது, டாஸ்க் வழங்கியது என சிறப்பாக செயல்பட்டதாக ரசிகர்கள் பலர் ஆதரவு கமெண்ட் செய்துள்ளனர். இதனால் பாவ்னி வெளியேறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

ஆக்டிவான அபிநய்

ஆக்டிவான அபிநய்

அதே போல் அபிநய், இப்போது தான் வீட்டில் இருப்பது தெரிய வருகிறது. நிரூப்புடன் வாக்குவாதம், தனது தரப்பு பாயிண்ட்களை பேசுவது, மற்றவர்களின் சண்டையில் தலையிட்டு சமாதானம் செய்து வைக்க முயற்சிப்பது என கேமை விளையாட துவங்கி உள்ளதாக ரசிகர்கள் பலர் கருதுகிறார்கள். அது மட்டுமின்றி கமலின் ரெகமென்டடேஷன் பெயரில் தான் அபிநய் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தாராம். அதனால் இன்னும் சில வாரங்கள் அவர் வீட்டிற்குள் இருப்பார் என கூறப்படுகிறது.

 இவர் தான் வெளியேறப் போகிறாரா

இவர் தான் வெளியேறப் போகிறாரா

மற்றவர்களை விட மதுமிதாவிற்கு தான் குறைவான ஓட்டுக்கள் பதிவாகி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இந்த வாரம் அவர் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இன்றும், நாளையும் பதிவாகி ஓட்டுக்கள் கடைசி நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 முதலில் காப்பாற்றப்படப் போகிறவர்

முதலில் காப்பாற்றப்படப் போகிறவர்

இன்றைய கமல் வரும் எபிசோடில் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்கின் போது போட்டியாளர்கள் கெட்ட வார்த்தை பேசியதை கண்டிக்க வேண்டும், அது பற்றி பேச வேண்டும் என ரசிகர்கள் பலர் கேட்டு வருகின்றனர். அதோடு ராஜுவை தான் கமல் முதலில் காப்பாற்றுவார் என கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X