இந்த வாரம் விக்ரம் ஃபேன்சுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கு...கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை : விக்ரம் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த ஒரு விஷயம் இந்த வாரம் நடைபெற உள்ளது. இதனால் இந்த வாரம் விக்ரம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

This week double treat for Vikram fans for these reason

விக்ரம் நடித்துள்ள கோப்ரா, பொன்னியின் செல்வன் இரண்டும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக இருந்து வருகின்றன. இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

விக்ரம், ஆதித்ய கரிகாலன் சோழன் ரோலில் நடத்துள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கு முன் ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளில் கோப்ரா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பல வருடங்களுக்கு பிறகு விக்ரமின் படங்கள் தியேட்டரில் ரிலீசாக உள்ள உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

கடைசியாக விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படம் தான் 2019 ம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டது. அதற்கு பிறகு விக்ரம் நடித்த மகான் படம் இந்த ஆண்டு ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் கோப்ரா படத்தின் மூலம் மீண்டும் விக்ரமை பெரிய திரையில் காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில், பொன்னியின் செல்வன் படத்தின் செகண்ட் சிங்கிள் இந்த வாரம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஃபர்ஸ்ட் சிங்கிள் வந்தியத் தேவனான கார்த்திக்காக வெளியிடப்பட்டது. செகண்ட் சிங்கிள் விக்ரமிற்காக என்பது ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது. இதனால் விக்ரம் ரசிகர்கள் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதே போல் விக்ரமின் கோப்ரா பட டிரைலரும் இந்த வாரம் வெளியிடப்படலாம் என சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் பாடல், கோப்ரா டிரைலர் என ஒரே வாரத்தில் இரண்டு விஷயங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க போகிறது.

இது மட்டுமல்ல விரைவில் விக்ரம் நடித்து, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் அப்டேட், அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ள சியான் 61 படத்தின் அப்டேட்டும் விரைவில் வெளிவர உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இனி விக்ரம் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X