தரமான சம்பவம் வெயிட்டிங்...பிக்பாசில் இந்த வாரம் நடக்க போகுது இது தான்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைய இன்னும் நான்கு வாரங்களே உள்ளது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருந்தாலும் இன்னும் 10 பேர் வீட்டிற்குள் உள்ளனர். இதனால் பிக்பாசில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

பதினோறாவது வார இறுதியான நேற்று அபினய் வெளியேற்றப்பட்டார். பனிரெண்டாவது வாரத்தின் துவக்க நாளான இன்று, இந்த வாரம் யாரெல்லாம் நாமினேட் ஆக போகிறார்கள். அடுத்து வெளியேற போகிறவர் யார். அடுத்த என்னவெல்லாம் டாஸ்க் கொடுக்க போகிறார்கள் என அனைவரின் மனதிலும் கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கும்.

என்ன நடக்க போகுது

என்ன நடக்க போகுது

ஆனால் இந்த வாரத்தில் அதை தாண்டி சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்க போகிறதாம். இது கண்டிப்பாக அடுத்து வரும் நாட்களில் கேமில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. அப்படி என்ன நடக்க போகிறது என கேட்கிறீர்களா?

ஓ...இது தானா

ஓ...இது தானா

வேறொன்றும் இல்லை. வழக்கமாக அனைத்து சீசன்களிலும் நடப்பதை போல், போட்டியாளர்களின் குடும்ப உறவுகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் ஃபிரீஸ் டாஸ்க் தான் இந்த வாரம் முழுவதும் நடைபெற உள்ளதாம். வீட்டிற்குள் வரும் உறவினர்கள் போட்டியாளர்கள் பற்றி என்ன சொல்ல போகிறார்கள் என்பது தான் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

டிஆர்பி எகிறும்

டிஆர்பி எகிறும்

அது மட்டுமல்ல ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளரை அவரின் குடும்பத்தினர்கள் கழுவி ஊற்றி, லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கும் சீன் நடக்கும். பிக்பாஸ் நான்காவது சீசனில் லாஸ்லியாவின் தந்தை அவரையும், கவினையும் விட்டு விளாசினார். கடந்த சீசனில் ஷிவானியின் அம்மா, அவர் பாலாஜி பின்னால் சுற்றுவதை சொல்லி திட்டி தீர்த்தார். இதனால் பிக்பாஸின் டிஆர்பி எங்கோ போனது.

இனி நீ தான் ராஜா

இனி நீ தான் ராஜா

அதே போல் இந்த சீசனில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருப்பது பாவனி, அபினய், அமீர் காதல் விவகாரம் தான். அபினய் நேற்று வெளியே சென்று விட்டார். இருந்தாலும் அபினய்யை விட பாவனியிடம் ஓவராக வழிவது, ஐ லவ் யூ சொல்வது, முத்தம் கொடுப்பது என ஓவராக சென்று கொண்டிருப்பது அமீர் தான். நான் போகிறேன், இனி நீ தான் ராஜா என நேற்று அபினய் வேறு ஹின்ட் கொடுத்து விட்டு போய் உள்ளார்.

தரமான சம்பவம் வெயிட்டிங்கா

தரமான சம்பவம் வெயிட்டிங்கா

பிடிக்கவில்லை, நோ என சொன்னால் அமீர் எல்லை மீறி செல்வது தெரிந்தும் பாவனி தொடர்ந்து அவருடன் பழகி வருவதை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள். இந்த நிலையில் பாவனியின் குடும்ப உறுப்பினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போக போகிறார்கள். இதனால் ஃபிரீஸ் டாஸ்க்கின் போது நிச்சயமாக ஒரு தரமான சம்பவம் பாவனி மற்றும் அமீருக்கு காத்துக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X