பள்ளி கால பருவத்திற்கு மாறிய பிக்பாஸ் வீடு...குறும்பு குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 வது நாளை கடந்துள்ளது. தற்போது 6 பேர் வெளியேற்றப்பட்டு, 12 பேர் போட்டியாளர்களாக இருந்தனர். முதல் வைல்ட்கார்டு என்ட்ரியாக அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
நாடியா சாங், சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏழு வாரங்கள் கடந்த நிலையில் எட்டாவது வாரத்தில் அபினய் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வாரம் 6 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

50 நாளில் அமீர் என்ட்ரி
இந்நிலையில் நிகழ்ச்சியின் 50 வது நாளில் இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக நடன இயக்குனர் அமீர் வீட்டிற்குள் சென்றுள்ளார். அமீரின் வருகையை தொடர்ந்து இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளது. கனா காணும் காலங்கள் என இந்த டாஸ்க்கிற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் ஆசிரியர்களாகவும், மாணவர்களாகவும் மாற வேண்டும்.

பள்ளியாக மாறிய பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலில் கண்டிப்பான வார்டனாக சிபி இருப்பார் என்றும், ஞாபக மறதியால் மாணவர்களின் பெயர்களை மறந்து விட்டு புனைப் பெயர் வைத்து கூப்பிடும் ஆசிரியராக அபிஷேக்கும் மாற வேண்டும். இசை மற்றும் நடன வாத்தியாராக அமீர் மாற வேண்டும். புதிதாக திருமணமான தமிழ் வாத்தியாராக ராஜு செயல்பட னேண்டும். மனைவியின் பிரிவை நினைத்து அவர் வருந்தும் போதெல்லாம் அவர் மாணவர்கள் மீது கோபப்படுவார்.

குறும்புக்கார மாணவர்கள்
அபினய், நிரூப், பாவ்னி, தாமரை, பிரியங்கா, வருண், ஐக்கி, அக்ஷரா, இமான் அண்ணாச்சி ஆகியோர் மாணவர்களாக செயல்பட உள்ளனர். வீட்டிற்கு அடங்காத குறும்புத்தனம் செய்யும் மாணவர்களாக இவர்கள் செயல்பட வேண்டும். அக்ஷரா தினமும் காலையில் அனைவருக்கும் உடற்பயிற்சி கற்றுக் கொடுக்க வேண்டும்.

வேக்அப்பில் துவங்கிய டாஸ்க்
இந்த டாஸ்க்கின் இறுதியில் சிறந்த மாணவர் ஒருவரை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும். காலை வேக்அப் சாங் ஒலிக்கும் போதே டாஸ்க் துவங்கப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டது. வேக் அப் சாங்கிற்கு சீக்கிரம் வந்து ஆடாதவர்களை அமீர் கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டது. மாணவர்களுக்கான விதிகள் வீட்டின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது.

அமீரை ஏற்காத ஹவுஸ்மேட்கள்
அமீர் ஸ்மாட்டாக இருப்பதாக ஐக்கியும், பாவ்னியும் பேசுகிறார்கள். அதே சமயம் அமீர் சிரிக்கவே மாட்டேன் என்கிறார். எப்போதும் கடுகடுவென இருப்பதாக தாமரை, வருண் மற்றும் அக்ஷராவிடம் குறை கூறுகிறார். அவர்களும் அமீரை ஏற்காதது போலவே பேசுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











