இந்த வாரம் நாமினேட் ஆன 9 பேர்.... இவர்களில் வெளியேற போவது யார் ?
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 58 வது நாளை எட்டி உள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 7 பெண் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே சமயம் வைல்ட் என்ட்ரியாக புதிதாக இரண்டு ஆண் போட்டியாளர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.
தற்போது 13 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்த வாரம் கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடந்த வாரம் இசைவாணி வெளியேறிய நிலையில், இந்த வாரம் ஐக்கி பெர்ரி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அண்ணாச்சி வாய்ப்பை பறித்த நிரூப்
இந்நிலையில் நிகழ்ச்சியின் 57 வது நாளான நேற்று, இந்த வார கேப்டனை தேர்வு செய்வதற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் சிபி, இமான் அண்ணாச்சி மற்றும் அபிஷேக் பங்கேற்றனர். இந்த போட்டியில் இமான் அண்ணாச்சி வெற்றி பெற்றார். ஆனால் தன்னிடம் உள்ள காயின் பவரை பயன்படுத்தி அண்ணாச்சியின் கேப்டன் பதவியை தட்டி பறித்தார் நிரூப்.

அண்ணாச்சி – நிரூப் மோதல்
நிரூப் தலைவரானதால் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பி விட்டார். ஆனால் அவரின் கேப்டன்சியை விரும்பாத இமான் அண்ணாச்சி, நிரூப் சொல்லும் வேலைகளை செய்ய முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் நிரூப், அண்ணாச்சி இடையே மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில் வரும் வார எவிக்ஷன் ப்ராசசிற்கான நாமினேஷன் நடத்தப்பட்டது.

நாமினேட் ஆன 9 பேர்
கடந்த 2 வாரங்களாக நாமினேட் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகமானவர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். சிபி, வருண், இமான் அண்ணாச்சி, அபிஷேக், பிரியங்கா, அபினய், பாவ்னி, அக்ஷரா, தாமரை, ராஜு ஆகிய 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

வெளியேற போகிறவர் யார்
இவர்களில் இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் தாமரை அல்லது இமான் அண்ணாச்சி வெளியேற்றப்படுவார்கள் என கமெண்ட் செய்துள்ளனர். ரசிகர்களின் இரண்டாவது தேர்வு அபினய் அல்லது அபிஷேக் வெளியேற்றப்படலாம் என கூறி வருகின்றனர்.

இவங்கள வெளியேற்றுங்கப்பா
சிபி, வருண், அபினய் இவர்களில் யாராவது வெளியேற்றப்படலாம். இவர்கள் வேஸ்ட். அக்ஷரா எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார். பார்க்கவே எரிச்சலாக உள்ளது. அவரை முதலில் வெளியேற்றுங்கள் என பலர் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











